Monday, September 07, 2009

சுதந்திர தலைநகரம்

கடந்த 30 ஆண்டுகள் இலங்கையில் கொடிய பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரனமாக நாட்டின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்திருந்தது. கடந்த மே மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதிகள் முற்றாக வடகிழக்கிலிருந்து ஒழிக்கப்பட்டதைதத் தொடர்ந்து நாட்டின் இயல்பு வாழ்கை திரும்பத்தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் ஆரம்பத்தில் வடகிழக்கை மையமாக வைத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்தாலும் பின்பு அது நாடுபூராக பரவி மக்களின் அன்றாடவாழ்வுக்கும் அபிவிருத்திக்கு பெரும் தடையாகவும் விழங்கியது.

எல்ரிரிஈயினர் வடகிழக்கு தழிழ்மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொன்டாலும் அவர்கள் தமிழ்மக்களை துன்புறுத்தியும் கப்பம் பெற்றும் பலவந்தமாக ஆண்,பெண்,,வயது வித்தியாசம் பாராது இயக்கத்தில் இணைத்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

வடகிழக்ககை நிரந்தரமாகவும் சுதந்திரமாகவும் வசித்து வந்த மக்கள் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி கடந்த30 ஆண்டுகளாக நாட்டின் ஏனைய பாகங்களில் தற்காலியமாக குடியேறினார்கள்.இவர்களுள் பெரும்பாலானோர் இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் அதனை அன்டிய பகுதிகளிலும் மற்றய சமூகத்துடன் சுமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

தலைநகரின் கேந்திர முக்கிய பகுதிகளான வெள்ளவத்தை,பம்பலபிட்டி, கொட்டாஞ்சேனை,தெஹிவலை போன்ற இடங்களில் மிகச்செறிவாக இவர்கள் வாழ்ந்து வருவதுடன் வியாபாரம், கல்வி,மத வளிபாடுகளில் ஈடுபட எதுவித தங்குதடையும் இன்றி வாழ்கையை நடத்திவருகின்றனர்.

கொழும்பில் வியாபார கேந்திர முக்கியமான செட்டித்தெரு, வெள்ளவத்தை கொச்சிக்கடைப் பிரதான வீதி பகுதிகளில் மிக அதிகமான கடைகள் தமிழருக்கு சொந்தமானவையே.
இதேபோல், வெள்ளவத்தை பம்பலபிட்டிப் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் தமிழ் மானவர்கள் அதிகமாக கலவி பயின்று வருகின்றனர்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவரினால் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்று பொய்ப்பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ள பல ஊடகங்களுக்குத் தெரியாது கொழும்பில் தமிழர்கள் எவ்வாறு சொகுசாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றார்கள் என்று.
தலைநகரில் எவ்வாறு சிறுபான்மையினர் சுதந்திரமாக வாழ்கின்றனரோ அதேபோல் வடகிழக்கிலும் அவர்கள் வாழ்வதற்க்குரிய நிலையை உருவாக்குவதில் அரசாங்கம் முழுமூச்சாக செயல்படுகின்றது எனவே அது மிக தொலைவில் இல்லை.

SimpleViewer requires Adobe Flash. Get Adobe Flash. If you have Flash installed, click to view gallery.

Reproduction of  news items are permitted when used without any alterations to contents and the source.

| About Us | Publications | News & Events | Resources | Useful Links | Services | Defence Units |

2009 Ministry of Defence, Public Security, Law & Order - Democratic Socialist Republic of Sri Lanka. All Rights Reserved

Comments and suggestions to : Web Editor