இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

இந்தோனேசிய விஜயத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…

[2017/03/10]

தாய்நாட்டுக்கு பொருளாதார, வர்த்தக வாய்ப்புகள் பலவற்றை பெற்றுக்கொண்டு தனது இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (08) இரவு நாடு திரும்பினார்.. 

 

ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு

[2017/03/10]

பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று இன்று (மார்ச் .09) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம்

[2017/03/09]

சாலியவெவ பிரதேசத்தில் ராஜங்கனை தென்பகுதியின் 13 மற்றும் 14 வலயங்களில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி மருத்துவ சிகிச்சை ஒன்று அண்மையில் (மார்ச் .07) இலங்கை இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது. 

 

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்

[2017/03/08]

இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் முகங்கொடுத்துள்ள பாரிய சவாலான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு பிராந்தியத்திலுள்ள நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். 

 

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

[2017/03/08]

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

 

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக நிகழ்வு.

[2017/03/08]

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம், அதனோடு இணைந்த மீனவர் ஒருவரது இழப்பு மற்றும் மேலும் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. 

 

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக இலங்கை கடற்படைக்கு விஷேட விருது

[2017/03/07]

ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை பெற்றுள்ளனர்.

 

ஜனாதிபதி ஜகார்த்தா Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார

[2017/03/06]

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். 

 

பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள்

[2017/03/06]

கெகிராவ சுமண வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இலங்கை இராணுவத்தினரால் இரு குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.

 

 

விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

[2017/03/06]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக நேற்று (மார்ச், 05) அங்கு விஜயம் செய்தார்.

 

ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம்.

[2017/03/05]

இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி.

 

வடக்கின் அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி

[2017/03/04]

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பல புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.  

 

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்கோ நான் தயாரில்லை – ஜனாதிபதி

[2017/03/04]

வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது

[2017/03/03]

கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

‘உத்தமாபிவந்தனா’ தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

[2017/03/02]

தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக துணிவுடன் எழுந்து நின்று வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டங்களுக்கு பக்கபலமாக இருந்ததை குற்றமாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகள் என...  

 

இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

[2017/03/02]

இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவை இன்று (மார்ச்.02) கொண்டாடுகிறது. இவ்வருட நிறைவையொட்டி விமானப்படை தலைமையகத்தில் பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  

 

இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு

[2017/03/01]

கிரிகெட் விளையாட்டு துறையில் நாட்டுக்கு பெருமை ஈட்டித்தந்த இரண்டு இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமையினை பாராட்டும் வகையில் இலங்கை இராணுவம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியள்ளது.  

 

பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/02/28]

விமானப்படை தலைமையாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (பெப்ரவரி . 28) கலந்து சிறப்பித்தார்.  

 

மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு [2017/02/28]

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு [2017/02/26]

சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது [2017/02/25]

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் “தேக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் விரிவுரை [2017/02/25]

நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு [2017/02/24]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்