இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

இலங்கை கடற்படையின் புதிய கப்பல் ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

[2017/07/27]

இலங்கை கடற்படையின் முதலாவது அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல், முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து தனக்கான ஆணையதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 02) பிற்பகல் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது. இப்புதிய அதி தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் ”இலங்கை கடற்படை கப்பல் சயுரல” ஆக ஆணையதிகாரம் பெற்று இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டது. 

 

சீன மருந்துவ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

[2017/08/06]

சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

 

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

[2017/08/05]

கிளிநொச்சி பிராந்தியத்தை சேர்ந்த 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/04]

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சூ ஜியாங்வெய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 04) சந்தித்தார்.

 

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு.

[2017/08/04]

ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலையங்களது கட்டளைத்தளபதிகளின் மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

 

நாடு பூராகவும் 240க்கும் அதிகமான குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன

[2017/08/04]

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவினால் கல்நேவ கந்துலுகமுவ வித்தியாலயம், நேகம நேகம முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் முல்லைதிவு துனுக்காய் கிராமம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் 03 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக நேற்று (ஆகஸ்ட், 02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

இராணுவ வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு

[2017/08/03]

பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அலுவலகத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியவசிய மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இராணுவ வைத்தியசாலையில் இன்று (ஓகஸ்ட், 03) இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றது.

 

செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/03]

இலங்கை மற்றும் புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 02) சந்தித்தார்.

 

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2017/08/02]

இந்திய கடற்படை தென் பிராந்திய கட்டளையகத்தின் பிரதம கட்டளையதிகாரி ,கொடிநிலை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்வே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை நேற்று (ஆகஸ்ட், 02) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

 

இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2017/08/02]

இந்திய பாதுகாப்பு (பாதுகாப்பு தயாரிப்புக்கள்) செயலாளர் திரு அசோக் குமார் குப்தா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 02) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

 

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு ஆரம்பம்

[2017/08/02]

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலைய கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு மற்றும் மற்றும் ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலைய ங்களின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று (ஆகஸ்ட், 01) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமாகியத.

 

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2017/08/01]

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதராகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 01) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

 

மூன்றுநாள் விஷேட டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

[2017/08/01]

ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக அண்மையில் (ஜூலை, 30) நிறைவு பெற்றுள்ளது.

 

கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவு

[2017/07/31]

இலங்கை கடற்படையினரின் சமூக நலத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் செயற்றிட்டத்தின் மூலம் கிராம புறங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

 

மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு

[2017/07/30]

ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட நவீன கடற்படைக்கப்பல் கொழும்பு வருகை

[2017/07/29]

இலங்கை கடற்படைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல், நேற்று காலை (ஜூலை,28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

 

முப்படையினரின் காட்சிக்கூடங்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகை [2017/07/30]

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது [2017/07/28]

ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2017/07/28]

துருக்கிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2017/07/28]

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு [2017/07/27]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்