இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் விசேட உரை (2018 மார்ச் 05)

[2018/03/07]

கடந்த சில தினங்களாக நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையில் வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினைக் கவனத்தில் கொண்டே இன்று நான் இந்த விசேட அறிக்கையினை வெளியிடுகிறேன். 

 

ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/03/09]

ஜப்பான் தற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரதானி எட்மிரல் கட்ஷுடோஷி கவனோ அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 09) சந்தித்தார்.

 

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பு

[2018/03/09]

இலங்கைக்கு வருகைதந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் திரு. ஜெப்ரி பெல்ட்மன் பாதுகாப்பு செயலாளர் (ஜனாதிபதி சட்டத்தரணி) கபில வைத்தியரத்ன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச், 09) சந்தித்துள்ளார்.

 

அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ  முகாம்

[2018/03/08]

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (மார்ச்,08) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இம்மருத்துவ முகாம் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டத.

 

இலங்கை விமானப்படையின் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2018/03/07]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “எயார் டட்டூ” விமானப்படை கண்காட்சி நிகழ்வுகள் யாவும் இம்மாதம் 05 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுபெற்றன.

 

மிதிவெடி அகற்றும் விஷேட தூதுக் குழுவினர் இராணுவ ஒத்துழைப்புடன் மிதிவெடி அகற்றும் பணிகளில்

[2018/03/06]

அதிமேதகு ஜனாதிபதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு மற்றும் தேசிய மிதிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் அழைப்பையேற்று வருகை தந்த விஷேட மிதிவெடி அகற்றும் தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் இன்று காலை(பெப்ரவரி,06) யாழ் முகமாலை மிதிவெடி அகற்றும் பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

 

வட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி

[2018/03/06]

அண்மையில் (மார்ச், 04) இலங்கை கடற்படை வடமாகன்த்தின் காங்கேசன்துறை பகுதியில் கள மருத்துவ சிகிச்சை ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

 

 

இலங்கை கடலோர காவற்படை 8ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது

[2018/03/05]

இலங்கை கடலோர காவற்படை தனது 8ஆவது ஆண்டு நிறைவினை நேற்று (மார்ச், 04) கொண்டாடியுள்ளது.

 

 

இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்

[2018/03/04]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

 

இலங்கை விமானப்படை "டட்டூ” கண்காட்சி செயலாளர் அவர்களால் திறந்து வைப்பு.

[2018/03/04]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

 

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம் 

[2018/03/03]

இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை விமானப்படை 67ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

[2018/03/02]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை இன்று (மார்ச், 02) கொண்டாடுகிறது. இவ்விஷேட தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து விமானப்படை தளங்களுக்குமான பிரதான நிகழ்வுகள் கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் பங்கேற்புடன் இன்று இடம்பெற்ற்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்ளை தேடும் பணியில் படையினர்கள்

[2018/03/01]

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பம்பரகந்த பிதேசத்திலுள்ள வங்கெடிகந்த மலைப்பிரதேசத்தில் வழிமாறிப் பயணித்து காணாமல் போன தனியார் பல்கலைக்கழக மாணவர்களை தேடும் பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 பேரை கொண்ட இராணுவ குழுவினர்களால் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

 

இராணுவத்தினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த விரைவு

[2018/02/27]

அண்மையில் (பெப்ரவரி, 25) இரத்தினபுரி முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினை அணைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். வேகமாகப் பரவும் தீயினை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்துவைப்பு

[2018/02/26]

கொழும்பு புதிய விமானப்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களினால் இன்று (26 பெப்ரவரி) திறந்து வைக்கப்பட்டது.

 

முல்லைத்தீவு இளைஞர்களுக்கு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள்

[2018/02/26]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்த முல்லைத்தீவு பிரதேச சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

 

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் [2018/02/25]

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது் [2018/02/25]

பேருந்து வெடிப்பு சம்பவம் தொடர்பான இராணுவ விசாரனைகள் ஆரம்பம் [2018/02/24]

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம் [2018/02/23]

நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி [2018/02/22]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்