இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

[2019/04/29]

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (ஏப்ரல், 29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – மே தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/05/01]

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக சேதமடைந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

பிரதான சந்தேக நபர்கள் கைது

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள். அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2019/04/30]

இலங்கை இராணுவம் அதன் ஏழு அமைப்புகளினூடாக தீவிரவாதிகளை கைது செய்யும் வகையில் நாடு முழுவதிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலமையகம் கொழும்பில் திறந்து வைப்பு

[2019/04/29]

இராணுவ தலைமையகத்தினால் இம் மாதம் (29) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரை உள்ளடக்கி மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் வரையிலான பிரதேசங்களை உள்ளடக்கி இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடையாக அமையும் முகத்திரைக்கு நாளை முதல் தடை

[2019/04/29]

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியதும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக அமையக்கூடியதுமான அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாளை (2019.04.29) முதல் அவசரகால கட்டளையின் கீழ் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இடம்பெற்ற பிரார்த்தனைகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்…

[2019/04/28]

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பேராயர் அதி.வண. மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகளில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.

 

ஊடக அறிக்கை

[2019/04/28]

பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தி இனவாத அல்லது மதவாத குழப்பங்களை தோற்றுவிக்கும் வகையில் பொய்யான செய்திகள், தகவல், படங்கள், நேர்காணல்கள் அல்லது ஏதாவது வெளியீடுகள் ஆகியவற்றை வெளியிடும் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) இயக்கங்களை இலங்கையில் தடைசெய்வதற்கு நடவடிக்கை… [2019/04/27]

துப்பாக்கி சூடு எதிர்த் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர் [2019/04/27]

நாடுபூரகவும் இராணுவ படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் [2019/04/27]

பொதுமன்னிப்பு வழங்களின் நிமித்தம் இராணுவ சேவையில் இருந்து விலகும் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு [2019/04/27]

ஊடக அறிக்கை (தேசிய ஊடக மையம்) [2019/04/26]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்