இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம்– ஜனாதிபதி ு

[2019/05/09]

புதிய தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/05/09]

ஜெனெரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் எயார் வைஷ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பீ.கே. கொடகதெனிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்.டப்.வீ. ஆர்டப்பீ, ஆர்எஸ்பி.வீஎஸ்வீ. யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 09) சந்தித்தார்.

 

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதில் பொலிஸ் தரப்பில் பிழைகள் நேர்ந்துள்ளதா என கண்டறிய சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விசாரணை

[2019/05/09]

வெல்லம்பிட்டியவில் உள்ள வெண்கல தொழிற்சாலை உரிமையாளர் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான முகம்மத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் ஆகும். ஏப்ரல் 22 ஆம் திகதி, அந்த தொழிற்சாலையில் ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு இல. 2 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் மே 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

 

அவசர தொடர்புகளுக்காக 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்

[2019/05/09]

அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையகத்திலுள்ள நடவடிக்கை பணியகத்தின் 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/05/08]

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அதிமேதகு துங்- லாய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட டப்.டப்.வீ. ஆர்டப்பீ, ஆர்எஸ்பி.வீஎஸ்வீ. யுஎஸ்பி அவர்களை செவ்வாய்கிழமையன்று (மே, 07) சந்தித்தார்.

 

தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் முற்றுகை

[2019/05/08]

வாளைச்சேனை பொலிஸ் பிரிவின் ரிதிதென்ன பகுதியில் தீவிரவாத குழுவினரால் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த 25 ஏக்கர் காணி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஆகியோரினால் திங்கட்கிழமையன்று (மே, 06) சோதனை இடப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/05/07]

பயங்கரவாத சம்பவத்திற்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை , பொலிஸ், விஷேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன அயராது பணியாற்றி வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுமாலை (மே, 06 ) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

 

பன்முக சமூகத்தின் நல்லிணக்கத்தை பேணிப் பாதுகாப்பதன் பொறுப்பு மதத் தலைவர்களையே சாரும்

[2019/05/07]

மிலேட்சத்தனமான பயங்கரவாதத்தை குறுகிய காலத்திற்குள் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் நாட்டு மக்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும்...

 

 

சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/07]

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேணல் சூ ஜியாங்வெய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை திங்கள்கிழமையன்று (மே, 06) சந்தித்தார்.

 

நீர்கொழும்பு சம்பவத்தை விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்

[2019/05/07]

நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்தத் தலையீட்டை அடுத்து நீர்கொழும்பில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

 

ஊடக அறிவித்தல்

[2019/05/07]

பாதுகாப்பு துறையினரால் வீடுகள் மற்றும் பொது இடங்கள் சோதனையிடப்படும்போது அதனை ஊடகங்களின் வாயிலாக காட்சிப்படுத்துவதனை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

 

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/05/06]

கடந்த 48 மணித்தியாலங்களின்போது, படையினர் அவர்களின் முழுக்கவனத்தையும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இன்று பாடசாலை வளாகத்தை சுற்றி விஷேட சோதனை நடவடிக்கைகள்

[2019/05/05]

நாளை திங்கட்கிழமையன்று நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மீண்டும் திறப்பதற்கான விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்களை நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனேவே வழங்கப்பட்டுள்ளன.

 

பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கின்றது – பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

[2019/05/03]

உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் மிக முக்கியமானதென சுட்டிக்காட்டிய ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பயங்கரவாத சவால்களை இலங்கையிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். .

 

விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/05/03]

விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.

 

கடற்படை தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/05/03]

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று (மே, 03) சந்தித்தார்.பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த.

 

இராணுவ தளபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/05/03]

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று(மே, 03) சந்தித்தார்.

 

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

[2019/05/03]

பொது மக்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

 

சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பொலிஸாரினால் அடக்கம்

[2019/05/03]

சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனை நிறைவு பெற்றதையடுத்து அவற்றினை அடக்கம் செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

 

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/05/02]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்களை இன்று(மே, 02) சந்தித்தார்.

 

தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

[2019/05/02]

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ஒருங்கிணைந்த தேடல் நடவடிக்கைகள் தொடர்கின்றனு.

 

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – மே தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/05/01]

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்தி

[2019/05/01]

நாளாந்த வேலை நேரத்தை எட்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தக் கொரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தின் அற்பணிப்பை நினைவு கூறும் தினமே மே தினமாகும்.

 

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

[2019/04/29]

ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட அவர்கள் புதிய பாதுகாப்பு செயலாளராக இன்று (ஏப்ரல், 29) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.

 

புனித அந்தோனியார் தேவாலய புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் காரணமாக சேதமடைந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

பிரதான சந்தேக நபர்கள் கைது

[2019/04/30]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்களென்ற சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 44 பேர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகின்றனர். அதில் 07 பேர் பெண்கள். அதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 15 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு [2019/04/30]

கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகம் ஸ்தாபிப்பு [2019/04/29]

மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடையாக அமையும் முகத்திரைக்கு நாளை முதல் தடை [2019/04/29]

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இடம்பெற்ற பிரார்த்தனைகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்… [2019/04/28]

ஊடக அறிக்கை [2019/04/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்