இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

[2019/05/23]

இந்திய பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

30 வருட கால யுத்த வெற்றியின் அபிமானத்தை எதிர்கால தலைமுறையினரும் உலகத்தினரும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

[2019/05/23]

இராணுவ வீரர்களின் போர்த்திறமை, தேசப்பற்று மற்றும் உன்னத மனித நேயம் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் வாசித்து தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் 30 ஆண்டு கால யுத்த வெற்றியின் வீரச் சரித்திரத்தை நூலாக தொகுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

[2019/05/22]

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

 

தற்கொலை குண்டுதாரிகள் மரபணுப் பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டனர்

[2019/05/22]

மரபணுக்கள் தொடர்பான பரிசோதனை அறிக்கை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளினது மரபணுக்களுடன் ஒத்துப்போயுள்ளதக அரச இரசாயனப் பகுப்பாயவுத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/05/22]

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் ஜோன் ஹோலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (மே, 21 ) சந்தித்தார்.

 

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/21]

இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் திரு. டொஷிஹிரோ கிடமுற அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 21 ) சந்தித்தார்.

 

வெசாக் காலத்தில் அமைதியான சூழல்

[2019/05/21]

வெசாக் விடுமுறை நாட்களில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவியது. வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், பொலிஸார், முப்படையினருடனும் சிவில் பாதுகாப்பு வீரர்களுடனும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

 

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது – ஜனாதிபதி

[2019/05/20]

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி

[2019/05/18]

கி. மு ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

 

ஒரு சமாதான தசாப்தத்தை நினைவுகூரும் "சாமயே தசவர்ஷிகஅபிஷேக சமரும -2019" நிகழ்வு முன்னெடுப்பு

[2019/05/18]

வீரமிக்க யுத்த வீரர்களால் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19ஆம் நாளாகும்.

 

நாட்டில் தற்பொழுது அமைதி நிலை

[2019/05/18]

நாட்டில் தற்பொழுது அமைதி நிலவுவதாகவும், நிலவும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்தவிதத்திலாவது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட முற்படும் நபர்கள் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மிகவும் கூர்மையான அவதானத்துடன் இருப்பதாகவும், போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

[2019/05/17]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.
 

 

கணேடிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/17]

இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் மக்கினொன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 17 ) சந்தித்தார்.
 

 

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/17]

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை நேற்று (மே, 16 ) சந்தித்தார்.

வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

[2019/05/17]

மினுவங்கொட பிரதேசம் உட்பட வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

[2019/05/16]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.

 

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு

[2019/05/16]

இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது.

 

வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது

[2019/05/16]

கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி தெரிவிப்பு [2019/05/15]

காணொளி கிளிப் மற்றும் புகைப்பட பரவல் [2019/05/15]

பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவர் [2019/05/15]

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி கடமைகளை பொறுப்பேற்பு [2019/05/14]

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கு விஷேட பிரிவு [2019/05/14]

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்