இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனைக் குழு நியமனம்

[2019/07/10]

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

‘ஹஸலக காமினியின்’ 28வது ஞாபகர்த்த தினம் அனுஷ்டிப்பு

[2019/07/11]

இலங்கையின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் காமினி குலரத்தனவின் 28வது வருட ஞாபகார்த்த தினம் கொழும்பு 03 இல் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 11) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது 

 

கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2019/07/09]

இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (ஜூலை, 09) இடம்பெற்றது. 

 

கடற்படைக்கான புதிய கப்பல் கொழும்பு வருகை

[2019/07/09]

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கடந்தமாதம் 05ஆம் திகதியன்று சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட பி 625 கப்பல் நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2019/07/09]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் மாகாணங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை, 06) ஆரம்பமானது.  

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

[2019/07/05]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் செயலிழந்துள்ள சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட துறைகளின் வர்த்தகர்களுக்கான நிவாரணமளிக்கும் நடவடிக்கையை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு குறித்த வர்த்தக சமூகத்தினரை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

 

“நாட்டுக்காக ஒன்றினைவோம்” மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது

[2019/07/04]

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் – ஜனாதிபதி

[2019/07/03]

லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று தம்மிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் அங்கு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் முறைக்கேடுகள் பற்றிய சகல விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் அது பாராளுமன்றத்திலும் மக்களிடமும் வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தென் சூடான் பயணம்

[2019/07/03]

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணியின் 6-வது கட்டத்தின் கீழ், தென் சூடானின் போர் நகரில் உள்ள ஸ்ரீமெட் லெவல் 2 மருத்துவமனையில் பணியாற்றுவதற்காக 11இராணுவ அதிகாரிகள் உட்பட 61 இராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் இன்று (ஜூலை, 03) தென் சூடான் நோக்கி பயணமானார்கள்.

 

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/07/02]

இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் (CASA) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜுன், 28) சந்தித்தனர்.

 

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு நாளை ஜனாதிபதி தலைமையில்

[2019/06/30]

போதையிலிருந்து விடுதலைபெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாள் இன்றாகும்.

சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில் இரண்டாவது கலந்துரையாடல்

[2019/06/29]

சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (ஜூன், 28) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் அமைச்சின் சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு அமைச்சில் ஓய்வு மற்றும் பிரியாவிடை பெரும் உத்தியோகத்தர்கள் உட்பட அரச பரீட்ச்சைகளில் திறமைகளை வெளிப்படுத்திய அமைச்சின் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிப்பு

[2019/06/28]

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, வெளியேரிச்செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை உட்பட க.பொ,த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை கௌரவித்து நேற்று (ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட (ஓய்வூ) டப்டப்வீ ஆர்டப்லிவ்பீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்

[2019/06/27]

நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தல் எனும் அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமையவாக உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல வலிமையினை பாதுகாத்தல் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் சமய ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கூட்டம்

[2019/06/27]

பிரதம விகாராதிபதிகள் மற்றும் விகாரைகளின் முக்கிய அதிதிகள் ஆகியோருடனான சந்திப்பு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களின் தலைமையில் இன்று(ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. விகாரைகளினால் வருடாந்தம் நடாத்தப்படும் பெரஹர நிகழ்வுகளின் போது அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

 

அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபதி

[2019/06/27]

தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் பாடசாலை நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன

[2019/06/25]

இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின்பேரில் நேற்று முதல் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தின் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு [2019/06/25]

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2019/06/24]

வெலிஓய பாடசாலையில் கடற்படையினரால் நீர்சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிப்பு [2019/06/24]

கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு [2019/06/23]

கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு [2019/06/23]

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்