வடக்கு, கிழக்கில் ஆலயங்கள் புனரமைப்பு
வடக்கு, கிழக்கில் சுமார் முப்பது வருட காலமாக நிலவிய
யுத்த சூழ்நிலையின் போது மக்களின் உடைமைகள் மாத்திரமன்றி பெருமளவான
வணக்கத்தலங்களும் சேதமடைந்துள்ளன. மோதல்களின் போது சேதமடைந்த வணக்கத்தலங்கள்
ஒருபுறமிருக்க, மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பிரதேசங்களில் அமைந் திருந்த
வணக்கத்தலங்களும் கவனிப்பாரின்றி சேதமடை ந்து போயுள்ளன. இந்து, பெளத்த,
கிறிஸ்தவ, இஸ்லாம் வணக்கத்தலங்கள் இவற்றினுள் அடங்குகின்றன.
யுத்த சூழலின் போது கிழக்கில் தமிழ், முஸ்லிம் எல்லைப் பிரதேசங்களில்
அமைந்திருந்த வணக்கத்தலங்கள் கூடுதலாக சேதத்துக்குள்ளாகியுள்ளன. மேற்படி
ஆலயங் களில் பெரும்பாலானவை அரசாங்கத்தின் நிதியுதவியுடன்
புனரமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம் இது வரை புனரமைக்கப்படாத வணக்கத் தலங்களைப் புனரமைப்பதற்காக
அரசாங்கம் நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வட பகுதியைப் பொறுத்த வரை இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிவரும்
பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்கள் நீண்ட காலப் பராமரிப்பின்மை காரணமாக
மோசமான நிலையில் காட்சியளிக்கின்றன.
மக்கள் மீளக்குடியமரும் இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும்
வேலைத் திட்டங்களில் ஆலயப் புனரமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவேதான்
வடக்கு, கிழக்கில் ஆலயப் புனரமைப்புப் பணிகளில் அரசாங்கம் கூடுதலான அக்கறை
செலுத்தி வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் சுமார் நூறு ஆலயங்களைப் புனர மைப்பதற்கான நடவடிக்கைகளை
அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் வட பகுதியில் உள்ள
பல்வேறு ஆலயங்கள் புனரமைப்புப் பணிக ளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மதமொன்றின் அடையாளச் சின்னமாக வணக்கத்தலம் விளங்குகிறது. வணக்கத் தலங்களை
அபிவிருத்தி செய் வதில் அரசாங்கம் பேதங்களற்ற முறையில் அனைத்து மதத்
தலங்களுக்கும் நிதியுதவிகளை வழங்கி வருவதை நாமறிவோம்.
வடக்குப் பிரதேசம் நீண்ட காலமாக யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்ததனால்
அங்கு சிவில் நிர்வாகத்தை உரியபடி நடைமுறைப்படுத்துவதில் பெரும் பிரச்சினை
நிலவி வந்தது. இத்தகைய நிலையில் அங்குள்ள வணக்கத் தலங்களையும் முழுமையாகப்
புனரமைக்கக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.
வட பகுதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் அங்கு
சேதமடைந்து காணப்படும் இந்து ஆலயங்களைப் புனரமைப்பதில் அரசாங்கம் விசேட
கவனம் செலுத்தி வருகிறது.
யாழ். மாவட்டத்தில் நெடுந் தீவு, ஊர்காவற்றுறை, சங்கானை, சண்டிலிப்பாய்,
தெல்லிப் பளை, கோப்பாய், பருத்தித்துறை, உடுவில், வேலணை, யாழ்ப்பாணம்,
நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், கர வெட்டி, மருதங்கேணி பிரதேச செயலாளர்
பிரிவுகளி லுள்ள ஆலயங்களுக்கு அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்றே வவுனியா, மன்னார், மாவட்டங்களிலும் இந்து ஆலயங்களின் புனரமைப்புக்
கென அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதன் பின்னர்
மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கம்
மேற்கொண்டு வரும் செயல்திட்டங்களின் முன்னேற்றமா கவே ஆலயப் புனரமைப்புப்
பணிகள் அமைந்துள்ளன.
நன்றி தினகரன் |