››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/7/2010 10:10:01 AM முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை

முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை குடும்பங்களாக மீள் இணைக்க நடவடிக்கை

சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டம்

புலி இயக்கத்தின் முன்னாள் உறுப் பினர்களைக் கொண்ட 144 குடும்பங்களைத் துரிதமாக மீள இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.

பெற்றோர் வேறாகவும் பிள்ளைகள் வேறாகவும் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள் முதல் தடவையாக குடும்பமாக ஒன்நிணைக்கப்பட உள்ளதாகவும் அவர் குநிப்பிட்டார். மீனிணைக்கப்படும் குடும் பங்கள் வவுனியாவில் அமைக்கப்பட உள்ள குடும்பப் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட உள்ளனர்.

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக 144 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அவர்கனின் 6 பிள்ளைகள் தமது பெற்றோருடன் தற்காலிக புனர்வாழ்வு முகாம்கனில் தங்கியுள்ளதோடு 11 பிள்ளைகள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
மேற்படி 144 குடும்பங்கனில் பலர் சட்டபூர்வமாக திருமணம் செய்திருக்கவி ல்லை எனவும் புலிகனின் அனுமதிப்படி மட்டுமே திருமணம் முடித்துள்ளதாகவும் ஆணையாளர் கூநினார். இவர்களுக்கு சட்டபூர்வமாக மணம் முடித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ன்னாள் புலி உறுப்பினர்கள் 11, 544 பேரில் 1, 882 பேர் ஆண்கள், 8,667 பேர் பெண்கள், 590 பேர் சிறுவர்களாவர். இவர்கனில் 4,143 பேர் திருமணமானவர்கள் எனவும், 6, 849 பேர் திருமணமாகாதவர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

இவர்கனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும தக்கவைக்கப்பட்டுள் ளனர்.

இவர்கனிடையே பிரிந்து காணப்படும் 144 குடும்பங்களை ஒரே இடத்தில் தங்கவைத்து புனர்வாழ்வு அனிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் கூநினார். அவர்கனின் பிள்ளைகளையும் தமது பெற்றோருடன் தங்கவைக்கத் திட்டமிடப்பட் டுள்ளது.

     
     
     
     
     


நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்