››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/8/2010 4:24:34 PM 65 மில்லியன் டொலர் செலவில் வடக்குக்கு அவசர புனர்வாழ்வு திட்டம்

65 மில்லியன் டொலர் செலவில் வடக்குக்கு அவசர புனர்வாழ்வு திட்டம்

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்குக்கான அவசர புனர்வாழ்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் தகவல் தருகையில்:-

வடக்கு அவசர புனர்வாழ்வு திட்டத்திற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் ஊடாக 65 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக பெறப்படவுள்ளது. மீள் குடியமர்த்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்துவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிக்க, விவசாய நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தல், பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் ஆரம்பமாகும் இந்த வேலைத் திட்டம் 2011ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையவுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்து வாழும் ஒரு இலட்சம் மக்கள் நன்மை அடையவுள்ளனர். இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த் துவதற்கு அரசாங்கம் ஐந்து கட்டத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதன் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில் இந்த திட்டம் உள்ள டக்கப்பட்டுள்ளது.

தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக இந்த திட்டம் முன்னெடுக்கப் படவுள்ளது.
சர்வதேச அபிவிருத்தி அமைப்பு எந்தவித வட்டி அறவிடலும் இன்றி இந்த நிதியை கடனாக வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்