››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/8/2010 4:24:38 PM மீளக்குடியேறிய பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள்

மீளக்குடியேறிய பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள்

வன்னி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுமார் பத்தாயிரம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஐயாயிரம் துவிச்கக்கர வண்டிகள் குடாநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வுள்ளன என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.ஜி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

துணுக்காய், மல்லாவி, கிளிநொச்சி பகுதிகளில் மீளக்குடியேறிய குடும்பங்களில் உள்ள உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்களுக்கே துவிச்சக்கர வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள ஆளுநர், மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்க முன்வந்துள்ளது என்றார்.

யுத்தம் காரணமாக சேதமடைந்துள்ள மதவாச்சி- தலைமன்னார் ரயில் பாதை சீரமைக்கப்படவுள்ளது. இதனை இந்திய அரசு புனரமைத்து கொடுக்க முன்வந்துள்ளது எனவும் சொன்னார். மன்னார் கல்பிட்டி ஊடான புத்தளம் பாதை, மன்னார் பூநகரி வழியிலான யாழ்ப்பாண வீதிகளும் விரைவில் திறக்கப்பட்டு மக்களுடைய பாவனைக்கு விடப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்