புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில்
விடுதலை
ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை புலிகள்
இயக்க முன்னாள் உறுப் பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக் கிழமை வவுனியா
செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத் தின் பணியகம் தெரிவித்தது.
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு
இல்லாதவர் களே இவ்வாறு விடுதலை செய்ய ப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர்
மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.
வவுனியா, பம்பைமடு புனர் வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்
டிருந்த இவர்களிடையே 18 வய துக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும்
அடங்குவர்.
ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப் பட்டு வருவதோடு
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவி
க்கப்பட உள்ளதாகவும் அவர் கூறி னார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு
விடுவிக்கப்பட உள்ளனர்.
டையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க
முன் னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.
இவர்களில் பயங்கரவாதச் செய ற்பாடுகளுடன் நேரடியாகத் தொட
ர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடி க்கைகளில்
ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணி களில் பலாத்காரமாக
ஈடுபடுத்தப்ப ட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப் படுபவர்களிடையே அடங்குவதாக
புனர்வாழ்வு ஆணையாளர் பணி யகம் தெரிவித்தது.
புனர்வாழ்வு அளிக்கப்படும் புலி கள் இயக்க முன்னாள் புலி
உறுப் பினர்களுக்கு பயங்கரவாதச் செயற் பாடுகளில் எத்தகைய தொடர்பு இரு ந்தது
என்பது குறித்து விசாரணை கள் நடத்தப்படுகின்றது.
இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக
விடுவிக்கப்பட உள்ளதாக வும் தயா ரத்னாயக்க கூறினார்.
புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவ ர்களிடையே பட்டதாரிகள் 22
பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர். இவர்களில் பட்ட தாரி
மாணவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி வழங்க நடவடி க்கை
எடுக்கப்பட்டுள்ள தோடு ஆசி ரியர்கள், மருத்துவர்கள் போன்றோரு க்கு தமது
முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங் கப்பட உள்ளதாக அவர்
தெரிவித்தார்.
நன்றி தினகரன் |