››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/9/2010 9:54:40 AM மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் வடபகுதிக்கு வரப்பிரசாதம்

மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் வடபகுதிக்கு வரப்பிரசாதம்

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் பற்றி எதிரணி வேட்பாளர் எதுவும் தெரியாதவர் போல் பேசுவது வேடிக்கையாக இருக்கின் றது. தான் தெரிவு செய்யப்பட்டால் மீள் குடியே ற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இவர் கூறுகின்றார்.

இடம் பெயர்ந்தவர்களை மீள் குடி யேற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுவது பற்றி எதுவும் தெரியாதவர் போல் இவர் பேசு கின்றார்.

லிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த லட்சக் கண க்கானோர் வன்னி நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் பெரு ம்பாலானோர் ஏற்கனவே சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டனர். உலகில் வேறெ ந்த நாட்டிலும் இவ்வளவு தொகையான மக்கள் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் மீளக் குடிய மர்த்தப்படவில்லை.

வேட்பாளர் பொன்சேகா தனது தேர்தல் விஞ்ஞாப னத்தில், மீள்குடியேற்றம் செய்யப்படும் ஒவ் வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சம் ரூபா கொடுக்கப் போவதாகக் கூறுகின்றார். ஒரு வார த்துக்கு முன்னரே அரசாங்கம் இதைக் கூறிவிட் டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இதைக் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களான ஐந்நூறுக்கு மேற்பட்ட குடு ம்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள குடியமர்த்திய வைபவத்தில் உரையாற்றிய போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு இலட்சம் ரூபா வழங்கப் போவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ முதற்கட்டக் கொடுப்பனவாகத் தலா ஐயாயிரம் ரூபாவுக்கான காசோலைகளையும் வழங்கினார்.

அரசாங்கம் திட்டமிட்ட முறையில் மீள் குடியேற்ற நடவடிக்கையை முன்னெடுக்கின்றது. யாழ்ப் பாண மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர் கள் கிட்டத்தட்ட இருபது வருட காலமாகத் தங் கள் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இவர்கள் இடம் பெயர்ந்த தற்கும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும் பிச் செல்ல முடியாதிருந்ததற்கும் புலிகளின் ஆயு தப் போராட்டமே பிரதான காரணம்.

இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங் கம் வடபகுதி மக்களின் மீள் குடியேற்ற நடவ டிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இந்த நட வடிக்கை கட்டங்கட்டமாகத் தொடரும் என்று அரசாங்க தரப்பில் கூறுகின்றார்கள்.

தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்கள் புலிகளின் தோல்விக்குப் பின் ஒன்றன் பின் ஒன்றாக மறை கின்றன. போக்குவரத்து வசதிகள் சீரடைகின் றன. மீள்குடியேற்றம் துரிதமாக முன்னெடுக்கப் படுகின்றது. தமிழ்ப் பிரதேசங்களில் அபிவிரு த்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீள் குடியேற்றமும் அபிவிருத்தியும் இடையறாது தொடர்வதற்குக் கைகொடுக்க வேண்டிய கடப் பாடு தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு

நன்றி தினகரன் ஆசிரியர்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்