புத்தளம்-மன்னார் பாதை திறக்கப்படும் போது அது ஹம்பாந்தோட்டை-யாழ்
கரையோரப் பாதையாக அமையும் எம். ஐ. எம். அப்துல் லத்தீப
கடந்த டிசம்பர் 26ந் திகதி கொடிய சுனாமி அனர்த்தத்தின்
ஐந்தாம் ஆண்டு நிறைவு தினத்தில்தான், பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர்
நிகழ்ந்த மற்றுமொரு சுனாமியையொத்த வடபுல முஸ்லிம்கள் வெனியேற்றப்பட்ட
கொடுமையின் மீட்சிக்கும், மீள்குடியமர்வுக்கும், புதிய பாதைத்
திறப்புக்குமான இனிப்பான செய்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வெனிப்படுத்தினார்.
இவ்வினிப்பான செய்திகள் வடபுல முஸ்லிம்களுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது போல புத்தளத்தைச் சேர்ந்த எனக்கு, பாதைத் திறப்பு
விடயம் மகிழ்ச்சியைத் தந்தது. இது 13 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய
கட்டுரைக்குக் கிடைத்த பதிலாகவும் இருந்தது.
கடந்த 26ம்திகதி கல்பிட்டி ஆலங்குடாவில் மீள் குடியேற்ற
அனர்த்த சேவைகள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்
பதியுதீன் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்
வடபுல மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஜனாதிபதி, அங்கு
குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் 2010 ஜனவரியில்
புத்தளம்- மன்னார் பாதை திறக்கப்படும் என்றும், மே மாதத்தில் உங்களுக்கான
மீள் குடியேற்றமும் ஆரம்பிக்கும் என்றும் செய்திகளை வெனியிட்டார்.
வைபவம் முற்றுப்பெற்று ஜனாதிபதியும், அமைச்சர்கள்
முதலானோரும் பகல் உணவுக்காகப் பெருங்கடற் கரைப்பகுதியில் அமைந்திருந்த
ஓய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பிரதி அமைச்சர் கே. அப்துல்
பாயிஸ் குழுவில் நானும் இணைந்திருந்தேன்.
அங்கு படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த என்னைக் கண்டுகொண்ட
ஜனாதிபதியின் ஆலோசகர் அல்ஹாஜ் ஏ. எச்.எம். அஸ்வர், சைகை மூலம் என்னை அருகே
அழைத்து ஜனாதிபதியிடம், ‘ஸேர் இன்று `ங்கள் ஜனவரியில் திறக்கப்படும் என
அநிவித்த புத்தளம்- மன்னார் பாதை திறக்கப்படல் வேண்டும் என 13 வருடங்களுக்கு
முன்னர் தினகரன் பத்திரிகையில் கட்டுரை வெனியிட்டும்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் அதுபற்நி நூல் வெனியிட்டும் இடம் பெயர்ந்த மக்கள்
மனதைக் கவர்ந்த லத்தீப் மாஸ்டர் இவர்’ என்று அநிமுகப்படுத்தியது.
மட்டுமின்நி எனது புகைப்படக் கருவியை வாங்கி ஜனாதிபதியுடன் நிற்க வைத்துப்
படமும் எடுத்தார். இது எனது வாழ்வில் மறக்க முடியாத எதிர்பாராத
நிகழ்வாகிவிட்டது.
1990 ஒக்டோபர் மாதம் ஒரு கொடுமை மிகுந்த மாதம். ஒரே மொழி
பேசிய வடபுல தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இன [தியாகப் புலிகளால்
பிரிக்கப்பட்டு முஸ்லிம்கள் இரண்டேயி ரண்டு மணிநேர அவகாசத்தில் உடுத்த
உடையுடன் ஓட ஓட விரட்டப்பட்ட தினம்.
எனினும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் இதில் உடன்பாடு இல்லையென்பதையும்
முஸ்லிம்கள் அநிவர். அமரர் மு. சிவசிதம்பரம் முஸ்லிம்கள் மீளும் வரை நானும்
அங்கு வரேன்’ என்று வெனியேநிய பின்னர் அவரது பூத உடலே வடக்குக்கு எடுத்துச்
செல்லப்பட்டமை இதற்கு ஒரு சான்று! விரட்டப்பட்டோர் பாதுகாப்பாக இங்கிரு
க்கும் நிலையில் விரட்டியோர் எங்கே?
1990 கனில் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏ. 9 வீதி
வழியாகவும், மன்னார் பிரதேச மக்கள் மதவாச்சி வழியாக ஏ. 9 வீதியையடைந்து
அநுராதபுரம் வழியாகப் பெரும் இன்னல்கனின் மத்தியில் புத்தளம் நகரையடைந்தனர்.
மன்னார் பிரதேச மக்கனில் அநேகர் கடல் வழியாகக் கல்பிட்டியை அடைந்தனர்.
அதுமுதல் அம்மக்கள் இன்றுவரை அனுபவிக்கும் சோகம் எழுத்தில் வடிக்க முடியாது.
அன்றைய ஐ. தே. கட்சி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இந்த
இடம்பெயர்வு பற்நி அந்த அரசு முதல் தொடர்ந்து வந்த அரசுகளோ, அல்லது புலிகளோ,
மனித உரிமை அமைப்புக்களோ, ஐ. நா. சபையுட்பட்ட சர்வதேச சமூகமோ பெரிதாக
அலட்டிக்கொள்ளவில்லை. புத்தளத்துக்கு வெனியே வாழும் ஏனைய பகுதி மக்கனில்
பலரும் கூட இங்கு வந்த பார்த்து பின்னர் இவ்வளவு பெரும் தொகை முகாம்களும்,
மக்களும் இங்கு வசிக்கின்றனரா என்று ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இம்மக்களுடன் நெருங்கிப் பழகியவர்கனில் நானும் ஒருவன்.
எத்தலம் போனாலும் புத்தளம் போகாதே, புத்தளம் போனாலும் புத்தியாய் நட; என்ற
வசை மொழிக்கு மாற்aடாக 1990கனில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வடக்கிலிருந்து
இடம் பெயர்ந்தோர் இங்கே வந்தனர். தெற்கு மற்றும் மத்திய பகுதியிலிருந்து
இறால் பண்ணையாளர்களெனவும் இங்கு வந்து குடியேநினர் என்பது குநிப்பிடத்தக்கது.
எனவே இந்த வழக்கு இன்று வழக்கொழிந்துவிட்டது.
இடம்பெயர்ந்த மக்கனின் வருகையால் இப்பிரதேசத்துக்கும் மக்களுக்கும் பல்வேறு
வழிகனில் பல்வேறு நன்மைகளுக்கும், பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டதை யாரும்
மறுப்பதற்கில்லை.
வடமேற்குக் கரையில் அமைந்துள்ள புத்தளத்துக்கும் ,மன்னார்
மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தின் மநிச்சிக்கட்டிக்கும் இடையிலான தூரம் ஆக
66 கி. மீட்டர்களே. அதேவேளை புத்தளத்தில் இருந்து கொழும்புக்கான தூரம் 130
கி. மீ. இதனைச் சுட்டிக்காட்டும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் விளம்பரப்
பலகையும் `ண்ட காலமாகப் புத்தளம் நகரில் காணப்படுகின்றது.
எனினும் பாதைதான் -x(இந்த 66 கி. மீ. பாதை
இருந்திருந்தால் 1990ல் விரட்டப்பட்ட போது மன்னார் மற்றும் முசலிப் பிரதேச
மக்கள் கடல் வழியாகவும், முருங்கன், மதவாச்சி, அனுராதபுரம் வழியாகவும்
பிடநியைச் சுற்நி வருமாப்போல புத்தளத்தையும், கல்பிட்டியையும்
அடைந்திருக்கத் தேவை இருந்திருக்காது.
2010 ஜனவரியில் திறக்கப்படுவதாகத் தற்போது
அநிவிக்கப்பட்டுள்ள புத்தளம் - மன்னார் பாதை வரலாற்றுப் பதிவினைக் கொண்டது.
புத்தளத்துக்கு வடக்காயும் அனுராதபுரிக்குக் கிழக்காயும், மன்னார்
முசலிக்குத் தெற்காயும் அமைந்துள்ள பெரிய வனப்பகுதி 1902ம்ஆண்டில்
பிரித்தானிய அரசால் வில்பற்று சரணாலயமாக மாற்றப்பட்டதையடுத்து அதுவரை
அதனூடாயமைந்திருந்த இலவன்குளம் மநிச்சிக்கட்டி (புத்தளம்- மன்னார்) வண்டில்
பாதை போக்குவரத்தும் தடைப்பட்டது.
அதற்கும் முன்னரான காலத்தில் இரண்டு அல்லது மூன்று
பெண்ணரசிகனின் (னுவேனி, அல்லிராணி, பல்Xஸ் ராணி) போன்றோரின்
ஆளுகைக்குட்பட்டிருந்த பிரதேசமாகவும், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள குதிரை
மலை துறைமுகம் அராபிய வணிகர்கனின் கப்பல் தரிப்பிடமாகவும் தங்குமிடமாகவும்,
சிங்கள இனத்தின் தலைவனான விஜயனதும் தோழர்களதும் கப்பல்கள் கரையொதுங்கிய
தளமாகவும், விவசாயம் செழித்தோங்கிய பிரதேசமாகவும் இருந்துள்ளது.
இப்பிரதேசத்தில் விவசாயம் செழித்தோங்கி இருந்தது
என்பதற்கு ஆதாரமாக இப்பகுதி பொன்பரப்புப் பற்று என்றே இன்றும்
உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகின்றது. பொன்னிற நெல்மணிகள் என்பதை
வழியுறுத்தி இப்பகுதியை ஆங்கிலத்தில், கோல்டன் ப்ளேய்ன் எனவும் கோல்டன்
க்ரைன் எனவும் அழைத்தார்கள்.
இவ்வனத்தினுள் கலாஓய, மோதரகம் ஆறு போன்ற ஆறுகள் `ர்ப்பாய்ச்சுவதுடன்,
அதிகமான `ர்த்தேக்கங்களும் உள்ளன.
கலாஓய, ஆற்றுக்குப் பொன்பரப்பி ஆறு என்ற பெயரும் உண்டு. இங்குள்ள `ர்த்தேக்கங்களை
‘வில்’ என்ற சொல் கொண்டு அழைக்கப்பட்டமையால் இந்த சரணாலயம் வில்பற்று
சரணாலயம் ஆனது. எனினும் நெல்லுற்பத்தி பூமி எப்படி வனமாகியிருக்கும்? என்ற
வினா எழும்புகின்றது.
அனுராதபுர இராசதானி காலத்தில் தென்னிந்திய தமிழ்
மன்னர்கனினால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட படையெடுப்புக்கனின் காரணமாக சிங்கள
அரசுகள் தெற்கு நோக்கி நகர்த்தப்பட்டமை வரலாறு. மக்களும் இடம்பெயர்ந்ததுடன்
விவசாய நிலங்களும் காடுகளாயின. `ர்த்தேக்கங்களும் தூர்ந்து நாசமாகின
என்பதும் வரலாறு. பின்னர் வந்த ஐரோப்பிய ஆட்சியாளர்களும் விவசாயத்துக்கு
முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கால ஓய ஆற்றுக்கும், மோதரகம்
ஆற்றுக்கும் இடைப்பட்ட இடமும் அதற்கும் வடகிழக்கே அமைந்துள்ள கஜு வத்த
உள்னிட்ட பிரதேசமும் 1902ல் வில்பற்று சரணாலயமாக அநிவிக்கப்பட்டது.
இதுமுதல் கரைத்தீவு, இலவன்குளம் ஊடான
மநிச்சிக்கட்டிக்கான பாதையும் மூடப்பட்டது. எனினும் பொது மக்கனின்
போக்குவரத்தானது அதிகாரிகனின் அனுசரணையுடன் நடைபெற்றதாக முன்னோர்கள்
கூறுகின்றனர். இதன்படி ஆறுகள் வற்நிய காலங்கனில் புத்தளத்தின் தெங்குப்
பொருட்களும், மநிச்சிக்கட்டியிலிருந்த கால் நடைகளும் பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளன.
1. புத்தளம் 2 கல்பிட்டி 3. காரைதீவு 4. பெரியநாகவில்லு
5. அருவாக்காடு 6. இலவன்குளம் 7. பொன்பரப்பி
8. வில்பற்று தேசிய வனம் 9. குதிரை மலை முளை
10 மநிச்சுக்கட்டி 11. கொண்டச்சி 12. சிலாபத்துறை
13. அநிப்பு 14. தள்ளாடி 15. மன்னார்
16. தலை மன்னார் 17. ஆதம் அணை
18. பள்ளதமடு 19. விடத்தல்தீவு 20. இலுப்பை
21. பூனகபரி 22. நல்லூர் 23. யாழ்ப்பாணம்
24. அனுராதபுரம் 25. மதவாச்சி
26. முருங்கன் சந்தி 27. தனுஷ்கோடி 28. இராமேஸ்வரம்
அதுபோல குதிரை மலைக்கான பயணங்களும் நடைபெற்றுள்ளன. ஆனால்
1985 மே மாதத்தில் இலவன்குளத்தில் இரவு வேளையில் வழமையாக நிறுத்தி
வைக்கபபட்டிருக்கும் இ. பொ. ச. பஸ்வண்டி வனத்தினூடாக வந்தபுலிகனினால்
கடத்தப்பட்டு புத்தளம் ஊடாக அனுராதபுரத்தைத் தாக்கினர்.
இதையடுத்து இலவன்குளத்திலும், புத்தளம் நகரிலும் இரண்டு
இராணுவ முகாம்கள் அவசரமாக அமைக்கப்பட்டன. இதனையடுத்து நூற்றாண்டு காலமாக
நடைபெற்ற மன்னாருக்கான கால்நடை மற்றும் மாட்டு வண்டி, ட்ரக்டர் வண்டிப்
போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டது.
இப்பாதையானது புத்தளம், இலவன்குளம், அல்லது கரைத்தீவு
ஊடாக மநிச்சிக் கட்டியையடைந்து, சிலாபத்துறை முருங்கன் வழியாக கிழக்கே
மன்னாரையும், வடக்கே பூநகரி வழியாக யாழ்ப்பாணத்தையும் அடைவதால் புத்தளம்
நகரிலுள்ள கரைத்தீவு, இலவன்குளம் பாதையானது இன்றும் மன்னார் வீதி அல்லது
யாழ்ப்பாண வீதி என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.
இப்போது முப்பது வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள
நிலையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட புத்தளம்- மன்னார் பாதை
மீண்டும் 2010 ஜனவரியில் திறக்கப்படவுள்ளதாக அநிவிக்கப்பட்டு ள்ளமை
இனிப்பான செய்தியே.
புத்தளத்திலிருந்து அனுராதபுரம், மதவாச்சி வழியாக முருங்கனையடைந்து (வில்பற்று
வனத்தைச் சுற்நி) மன்னாரையடைய 12 கி. மீ. பயணிக்க வேண்டும்.
ஆனால் வனத்தின் மேற்குக் கரையோரமாக மநிச்சிக்கட்டி
முருங்கன் ஊடாக மன்னாரை ஆக 105 கி.மீ. களே பயணிக்க வேண்டும்.
இதன் மூலம் 77 கி. மீ. தூரம் குறைவடையும். இதில் உள்ள மற்றுமொரு நன்மை
என்னவெனில், ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார்,
மற்றும் யாழ்ப்பாணத்துக்கான (புநகரி) கரையோர கற்பாதையாக இது அமைந்துவிடும்
என்பதாகும்.
அத்துடன் புத்தளம் இலவன்குளம் வரை அமைந்துள்ள புகையிரதப் பாதையும் முருங்கன்
வரை `டிக்கப்பட்டால் முசலி மக்கள் நன்மையடைவதுடன் மடுவுக்கான புனிதத்
தளயாத்திரைகளும், மீள் குடியேற்றங்களும், இலகுவாகும் பொருளாதார
அபிவிருத்தியும் ஏற்படும்.
படங்கள்: கல்பிட்டி தினகரன் நிருபர்
நன்றி தினகரன் |