ஜனாதிபதி தலைமையில் இனப் பிரச்சினைக்குத தீர்வு
தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கப் போவதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் கூறியிருப் பது தமிழ் பேசும்
மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம்.
தமிழ் பேசும் மக்கள் அனுபவித்தவையும் அனுபவிப்ப வையுமான பெரும்பாலான
துன்பங்களுக்கு இனப் பிரச்சினையே அடிப்படையான காரணமாக இருப்பதா லும் அறுபது
வருடங்களுக்கு மேலாக இப்பிரச்சினை தீர்வின்றி இழுபடுவதாலும் இனப்
பிரச்சினையின் தீர்வில் தமிழ் பேசும் மக்கள் கூடுதலான கவனம் செலுத்த
வேண்டியவர்களாக உள்ளனர்.
சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனப் பிரச்சினையை மாத்திரம்
பேசுபொருளாகக் கொண்டு அரசியல் நடத் திய தமிழ் அரசியல் கட்சிகள் இனப்
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் பார்க்கத் தங்கள் அரசியல் இரு ப்பை
உறுதிப்படுத்துவதிலேயே அக்கறை செலுத்தியத னால் பிரச்சினையின் தீர்வு
சாத்தியமாகவில்லை.
பிர ச்சினையைச் சிக்கலாக்கும் வகையில் பல சந்தர்ப்பங் களில் இவர்கள்
செயற்பட்டிருக்கின்றார்கள். இப்போது தீர்வுத் திட்டம் எதுவும் இல்லாமல்
கைவிரித்து நிற்கி ன்றார்கள். சுருக்கமாகக் கூறுவதானால் இத்தலைமை
தோல்வியடைந்த தலைமை என்ற நிலைக்கு வந்து விட்டது. எனவே, இனப்
பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான நிலைப்பாட்டைக் கொண் டுள்ள ஒரு
தலைமையை நாட வேண்டிய அவசியம் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் கூறியதை
அவரது செயற்பாட்டின் பின்னணியில் பார்க்கும் போது, இனப்பிரச்சினையின்
தீர்வைப் பொறுத்த வரையில் தமிழ் பேசும் மக்கள் அவரது தலைமையின் மீது
நம்பிக்கை வைக்க முடி யும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இயன்றளவு க்குச்
சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட் டைப் பெறும் நோக்கத்துடன்
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி நியமித்தார். இக்குழு அரசியல்
கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்று ஆரோக்கிய மான கருத்துப் பரிமாறலுக்குப் பின்
அறிக்கையொ ன்றை ஜனாதிபதியிடம் கையளித்திருக்கின்றது.
இவ் வறிக்கையில் உள்ள ஆலோசனைகள் அரசியல் தீர் வின் நியாயமான ஆரம்பமாக
உள்ளன. இவ்வாலோச னைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழ் பேசும் மக்கள்
கைகொடுக்க வேண்டும்.பாராளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் பிரதி நிதிகளைக்
கொண்டுள்ள மூன்று கட்சிகள் சர்வ கட் சிப் பிரதிநிதிகள் குழுவின்
செயற்பாடுகளில் பங்கு பற்ற வில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண் டும்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
அதன் ஆலோசனை களைக் கூட அனுப்பி வைக்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குழுவின் கூட்டங்களில்
பங்குபற்றவில்லை. ஏற்க முடியாத நொண் டிச் சாட்டுகளைக் கூறிக் கூட்டங்களைப்
பகிஷ்கரி த்தது. மக்கள் விடுதலை முன்னணி சர்வகட்சிப் பிரதி நிதிகள் குழுவைக்
கலைத்துவிட வேண்டும் எனக் கூறியது. இம்மூன்று கட்சிகளும் இப்போது எதிரணி
ஜனாதிபதி வேட்பாளரின் பிரதான ஆதரவு அணிகளாகச் செயற்படுகின்றன.
இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடை முறையை ஆரம்பித்து
வைத்திருப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த நடைமுறை இடையறாது
முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழ் பேசும்
மக்களுக்கு உண்டு.
நன்றி தினகரன் |