››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/12/2010 10:13:00 AM கிழக்கு மக்களின் கஷ்டம் நீங்கிவிட்டது; எதிர்காலத்தை பாதுகாப்பது எனது பொறுப்பு – சனாதிபதி

கிழக்கு மக்களின் கஷ்டம் நீங்கிவிட்டது; எதிர்காலத்தை பாதுகாப்பது எனது பொறுப்பு – சனாதிபதி

துப்பாக்கிக் காலாசாரர்திற்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்லாமல் இதமான அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே சனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மீன்பாடும் தேன்நாட்டில் கடந்த 30 வருடங்களாக மீன்கள் பாடுவதில்லை. யுத்தம் பல்வேறுபாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 1970 ஆம் ஆண்டில் நான் நீதி மன்ற கடமைகளுக்காக மட்டுநகருக்கு வந்துள்ளேன். அப்போது இரவிரவாக விழித்திருந்து மீன்கள் பாடுவதைக் கேட்க ஆவலுற்றமை இப்போதும் நினைவில் உள்ளது.

இன்று கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பிரதேச மக்களை அதன் பங்;காளிகளாக்குவதற்கு தயாராக வேண்டும். நான் பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவனல்ல. உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நாம் சொல்வதைச் செய்வோம். நீங்களும் எம்மை முழுமையாக நம்பலாம்.

இன,மத ரீதியான அரசியல் நோக்கங்கள் இனித்தேவையில்லை. இன மத குல பேதமில்லை. சிறுபான்மை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. மக்களின் கஷ்டகாலம் நீங்கிவிட்டது. வளமான எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது எனது பொறுப்பு.

இப்பிரதேச விவசாயிகளின் நலன்களில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். அதேபோன்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்போம். பிரதேச பட்டதாரிகள் படித்தவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.

நன்றி ஜனாதிபதி இணையம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்