வேலைவாய்ப்பு இளைஞர் யுவதிகளை தேடிவரும் யுகத்தை ஏற்படுத்துவோம்
இந்த நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கள்
தேடிவரும் யுகத்தை ஏற்படுத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார்.
“உங்களுக்கும், உங்களது எதிர்கால சந்ததியினருக்கும்
வளமான நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுப்பதே எனது பொறுப்பாக கருதுகின்றேன்”
என்றும் ஜனாதிபதி கூறினார். இந்நாட்டு மக்கள் இன, மத, குல, மாகாண
பேதங்களின்றி ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழுகின்றார்கள் என்பதை சர்வதேச
சமூகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
அபேட்சகரான என்னை ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்
என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல்
பிரசாரக் கூட்டம் அமைச்சர் குமார வெல்கமவின் ஏற்பாட்டில் மத்துகம
விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2005ம் ஆண்டில் நான் ஜனாதிபதியாகப் பதவியேற்கும்போது நாடு
துண்டாடப்பட்டிருந்தது. பாரிய அர்ப்பணிப்புக்களைச் செய்தே நாட்டைப்
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்திருக்கின்றோம்.
இதற்கென சுமார் 30 ஆயிரம் படை வீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம்
செய்திருக்கின்றார்கள். கடந்த 30 வருடங்களாக நாட்டு மக்கள் பலவிதமான துன்ப
துயரங்களை அனுபவித்திருக்கின்றார்கள். இவ்வாறான அர்ப்பணிப்புக்களைச் செய்து
விடுவித்திருக்கும் நாட்டை மீண்டும் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளியோம்.
“மஹிந்த சிந்தனை 2” தேர்தல் விஞ் ஞாபனம்
வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல நிவாரணங்கள் நாட்டு மக்களுக்காக
அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு ரூபா 2500.00
சம்பள உயர்வு வழங்கப்படும். எமக்கு பொய் வாக்குறுதிகள் கொடுக்கும் பழ க்கம்
கிடையாது. செய்வதையே சொல்லும் ஒரே அரசியல் தலைவராகவே நான் விளங்கு கின்றேன்.
என்னை நீங்கள் நம்புகின்aர்கள். நான் உங்களை நம்புகின்றேன்.
அரச துறையை மேம்படுத்தவும், பாது காக்கவும் தேவையான சகல
நடவடிக் கைகளையும் எடுத்துள்ளோம். இச்சேவையின் கெளரவத்தைப் பாதுகாத்துள்ளோம்.
ஆனால் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் அரச சேவையை சீரழிப்பதற்கான சகல
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
எவ ருக்குமே தொழில் வாய்ப்பு வழங்கப் படவில்லை. நாம் மனிதாபிமான இராணுவ நட
வடிக்கையை முன்னெடுத்த அதேநேரம், பாரிய அபிவிருத்தி நடவடிக்கை களையும்
மேற்கொண்டு வந்திருக்கின்றோம். இதனை நாட்டு மக்கள் அறிவர். நாம்
கிராமங்களையும், நாட்டையும் பாதுகாத் துள்ளோம். எம்மில் சேற்றுப்படிவுகள்
கிடையாது. எம் கரங்களில் இரத்தக் கரையும் இல்லை. வஞ்சம் தீர்க்கும் அரசியல்
நாட்டுக்குச் சரிவராது.
உங்களது குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியைப்
பெற்றுக்கொடுங்கள். அவர் களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல தொழில்
வாய்ப்புக்கள் கிடைக்கும். இளைஞர், யுவதிகளை வேலை வாய்ப் புக்கள் தேடிவரும்
யுகத்தை ஏற்படுத்துவோம். அதற்குத் தேவையான சகல நடவடிக்கை களும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மஹிந்த சமரசிங்க, டாக்டர்
ராஜித சேனாரட்ன, ரோஹித அபேகுணவர்தன, பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி
உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி தினகரன் |