››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/13/2010 9:15:29 AM தமிழ் மக்களின் பார்வையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தமிழ் மக்களின் பார்வையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
 

பிரம்மஸ்ரீ ராமசந்திர குருக்கள் (பாபு சர்மா)

2004ம் ஆண்டு மஹிந்த ராஜ பக்ஷ ஜனாதிபதி பதவி ஏற்ற காலத்திலிருந்து சகல மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கி கெளரவம் அளித்ததை எவருமே மறுப்பதற்கில்லை.

பதவி ஏற்ற பின்னர் பல எதிர்ப்புகளின் மத்தியில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் நோர்வே நாட்டு சமாதான தூதர் எரிக் சொல்ஹேம் மீள் வருகையானது மீண்டும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டமை சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு இருந்தார்.

இந்த ஜனாதிபதியின் முயற்சி சமாதான பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களின் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஆர்வமாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. இதனை தமிழ் மக்கள் யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் எனும் அவர்களது விருப்பத்திற்குரிய கோரிக்கைகளினை ஏற்று அமைச்சர் நிமால் டி ஸ்ரீபாலா இலங்கை அரசாங்கம் சார்பாக தூதுக்குழுவை அனுப்பி வைத்து சமாதான பேச்சு வார்த்தைக்கான முயற்சிகளை அக்கறையுடன் முன் எடுத்தார்.

நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெம் மீண்டும் இலங்கை வந்ததும், ஒஸ்லோவில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் செயல்பட்டவர் என்பது இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டு விடயமாகும்.

கிழக்கு மாகாணத்தில் மகாண சபைக்கான தேர்தலை நடத்தி பல எதிர்ப்புகளின் மத்தியில் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமித்து கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நெஞ்சங்களை வென்றெடுத்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குத்தான் என்பது இலங்கை வாழ் தமிழ் மக்கள் அறிந்த விடயமாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்ற காலத்திலிருந்து 2006, 2007, 2008 அலரிமாளிகையில் தமிழரின் உழவர் திருநாளான தைப்பொங்கலை தமிழ் பாரம்பரிய முறையில் கொண்டாடியவர். 2009ல் மலையகத்தில் தைப்பொங்கல் விழாவை கொண்டாயிருந்தார். தைப்பொங்கல் என்பது தமிழ் மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாகும். இத்தகைய சிறப்பு பொருந்திய தைப்பொங்கலை கெளரவப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதி இந்தக் கொண்டாட்டங்களில் தலைமை வகித்து தமிழ் மக்களை பெருமைப்படுத்தினார்.

தமிழர்களின் மதிப்பைப் பேணும் முகமாக தமிழில் ஐக்கிய நாட்டு சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் கொடுத்த மிகப் பெரும் அந்தஸ்து ஆகும்.

இன்று தமிழ் மக்கள் ஜனாதிபதியை சந்திக்கும் வேளையில், விசேட தினங்களில் ஜனாதிபதி அடிக்கடி தமிழில் உரையாற்றி வருவது அவர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கொடுக்கும் சிறப்பாகும். இப்பேச்சுத்திறமை மூலம் தமிழ் மக்களை தன்னுடன் நெருக்கமாக கொண்டு வந்த அவர்களுக்கு இருக்கும் ஆதங்கங்களை நீக்க வேண்டும் என்ற ஈடுபாட்டின் அடையாளமே ஜனாதிபதி தமிழில் பேசிவருவதாகும்.

ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தமிழ் மக்களுக்குத் தீர்வினை காண வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கின்றார். தென்னிலங்கை மக்களின் ஒத்துழைப்புடனேயே தமிழ் மக்களுக்கான தீர்வினை காண வேண்டும். அரசியல் பேதம் மறந்து தூர நோக்குடனேயே மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் 13வது அரசியல் அமைப்பு திட்டத்திற்கு மேலாகவும் தமிழ் மக்களுக்கான உரிமையை கொடுப்பதற்கு ஜனாதிபதி ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை. பதறாத காரியம் சிதறாது என்பதற்கமையவே 128 சர்வகட்சி மாநாட்டை நடத்தியும், இலங்கை வாழ் சகல தரப்பு உதவியுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதன் மூலம் எதிர்காலங்களில் சிங்கள- தமிழ், சிங்கள- முஸ்லிம் தமிழ்- முஸ்லிம் மக்களிடையே வேற்றுமைகளை தோற்றுவிக்கா வண்ணம் ஏற்படும் அரசியல் தீர்வு என்றும் நிரந்தரமானவை.

இலங்கை நாட்டிற்கு சுபீட்சமானவை என்ற யதார்த்தமான கொள்கை மூலம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வழி முறைகளை காண்பதில் ஜனாதிபதி மஹிந்த அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார். ஏ 9 பாதையின் நிரந்தர திறப்பு, யாழ். மாவட்ட ஊரடங்கு சட்டம் முற்றாகத் தளர்வு, யாழ் தேவியின் யாழ்ப்பாண பிரயாணத்திற்கான ஒழுங்கிற்கான ஏற்பாடு, வடக்கு- தெற்கு தங்குதடையின்றிய பயணம் என்பன தமிழ் மக்களின் வாழ்வில் என்றுமே எதிர்பார்த்திராத சரித்திரபூர்வ மான சம்பவங்களாகும். நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கு தனது 2ம் பதவிக் காலத்தில் நல்ல தீர்வு தருவார் என்பதில் ஐயமில்லை.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்