பொங்கல் திருநாளில் சமாதானம், சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்பட
பிரார்த்திப்போம்
ஜனாதிபதி வாழ்த்து
இலங்கை வாழ் அனைத்து இந்துக்க ளுக்கும் எனது மகிழ்ச்சிகரமான தைப் பொங்கல்
வாழ்த்துக்களைத் தெரிவிப் பதோடு எம்மிடையே சமாதானமும் சுபீட்சமும்
புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்பட பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது;
இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் தமது இந்து சகோதரர்
களுடன் சேர்ந்து இலங்கையின் பிரபல மான இந்துப் பண்டிகையான தைப் பொங்கல்
பண்டிகையைக் கொண்டாடும் இவ் வேளையில் சுமார் மூன்று தசா ப்தங்களாக அவர்களின்
பெரும்பாலான வர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை அனுபவிக்கக்
கிடைத்திருப்பது அவர்களது மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகிறது.
இந்துக்களின் பஞ்சாங்கத்தில் மிக விசேடமான ஒரு பண்டிகையான தைப் பொங்கல்
மரபுகளையும் கிரியைகளையும் இந்துக்கள் தொடர்ந்தும் அனுஷ்டித்து வருகின்றனர்.
இரண்டு வகையில் புனித மாகக் கருதப்படும் இத்தினம் சிறந்த அறுவடையை
எதிர்பார்த்தும் விவசாயிகள் தமது கடின உழைப்புக்குப் பின்னர் பெற்ற
அறுவடைகளுக்காகவும் அதை அளித்த சூரிய பகவானுக்கு நன்றி செலு த்துவதற்காகவும்
கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இலங்கையின் எல்லா பாகங்களிலும் பரவலாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கல்
பண்டிகையின்போது இந்துக்கள் தமது பாரம்பரிய கலாசார மரபுகளை அனுஷ்டித்து,
அவற்றுக்கு தம்மை அர்ப் பணித்து, எதிர்காலம் குறித்தும் எமது சமூகத்தின்
அமைதி, சுபீட்சம், புரிந்துணர்வு ஏற்படவும் சாதகமான எதிர்பார்ப்புகளை
வைக்கின்றனர். இது எமது சமூகத்தின் பண்மைத்துவத்திற்கு சிறந்த
எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இன்றைய தைப்பொங்கல் தினத்தில் எமது இந்து சகோதரர்களுக்கு எதிர்காலம்
குறித்த நம்பிக்கைதரும் எதிர்பார்ப்புகளை வைப்பதற்கும்
வென்றெடுக்கப்பட்டுள்ள சமாதானத்திற்காக நன்றி செலுத்தவும் தங்களது
குழந்தைகளுக்குப் போன்றே முழு இலங்கையர்களுக்கும் புதியதோர் இலங்கையை
கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமைக்காகவும் நான் பெரிதும்
மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ் வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் |