››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/15/2010 8:45:57 AM அபிவிருத்தி யுகம் ஆரம்பமானதன் அறிகுறி

அபிவிருத்தி யுகம் ஆரம்பமானதன் அறிகுறி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளி யிட்டு வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாப னத்தில் அடங்கியுள்ள பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வர வேற்பைப் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ‘மஹி ந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு’ என்ற தலைப் பில் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத் தில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கைகள் இலங்கைக்குப் பொருத்தமான தனித்துவ மிக்க அம்சங்களைக் கொண்டிருப்பதாக பொருளாதார நிபு ணர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பார்க்கிலும் உள்ளூர் முத லீட்டைப் பெருக்குவதென்பது மிகுந்த பயன் தருவ தாகும். ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனமானது அதனை உணர்த்துகிறது.

கைத்தொழில் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முத லீட்டாளர்களையே முழுமையாக நம்பியிருத்தல் தவறு. வெளிநாட்டு முதலீடுகளின் விளைவாக நாட்டில் தொழில் வாய்ப்புகள் உருவாகுமென்பது ஒருபுறமிரு ந்தாலும் அம்முதலீடுகளால் கிடைக்கின்ற ஒட்டுமொத்த வருமானமும் வெளிநாடுகளையே சென்றடைகிறது.

எனவேதான் உள்நாட்டு வர்த்தகர்களின் முதலீடுக ளுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டின் சுமுக சூழ்நிலை உருவாகியுள்ள இன்றைய வேளையில் இலங்கையில் பல்வேறு கைத்தொழில் துறைகளிலும் முதலீடுகளை ஆரம்பிப்பதில் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை அறிய முடிகி றது.

இத்தகைய முதலீட்டு ஆர்வம் இலங்கையிலு ள்ள வர்த்தக சமூகத்தினரிடமும் ஏற்பட வேண்டு மென்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும். உள்ளூர் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்புகள் தாரா ளமாக வழங்கப்படுமென அரசாங்கம் உறுதியளித்து வருவதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் பொரு ளாதாரத் துறையில் கணிசமான முன்னேற்றம் ஏற் பட்டு வருகிறது. இன்றைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் வழங்கப்பட்டுள்ள தொழில் நியமனங்களை வரலா ற்று சாதனையெனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும்.

இன்றைய ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ள இத்தனை பெரும் எண்ணிக்கையான பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் முன்னொரு போதுமே வழங்கப்பட்டதில்லை. அதேசமயம் பட்டதாரிகளின் தொழிலில்லாப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் யுத்தத்துக்குச் செலவிடப்பட்ட பெருந்தொகை நிதியானது தற்போது நாட்டின் அபி விருத்தித் திட்டங்களுக்குச் செலவிடப்பட்டு வருவதா லேயே புதிய தொழில் நியமனங்களும் பொருளாதார அபிவிருத்திகளும் சாத்தியமாகியுள்ளன. இதன் மூலமே அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவும் ஏதுவாகியுள்ளது.

இத்தகைய மாற்றங்களெல்லாம் ஒரு விடயத்தை எமக்குத் தெளிவாகப் புரிய வைக்கின்றன. நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளதால் ‘அபிவிருத்தி யுகம்’ ஆரம்பமாகியுள்ளதென்பதே தெளிவான உண்மையாகும்.
நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்