››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/19/2010 10:15:06 AM வீதி அபிவிருத்தியில் வரலாற்று சாதனை

வீதி அபிவிருத்தியில் வரலாற்று சாதனை

இலங்கையில் கடந்த நான்கு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை நோக்குவோமாயின் நாட்டின் வரலாற்று சாத னையென்றே அவற்றைக் குறிப்பிட வேண்டியுள் ளது. எமது நாட்டில் வீதி அபிவிருத்தியைப் பொறு த்தவரை இத்தனை துரிதமான பணிகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டது கிடையாது.

இன்றைய அரசாங்கத்தின் பெரும் சாதனை இதுவாகும். முன்னரெல்லாம் எமது நாட்டின் பெருந்தெருக்கள் மிக மோசமான நிலையிலேயே காட்சியளித்தன. கரடு முரடான பெருந்தெருக்கள் காரணமாக வாகனங்களு க்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன. தூரப் பயண மொன்றை மேற்கொள்வதாயின் அன்றைய நாட்களில் வாகன சாரதிகள் அனுபவித்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...

இத்தகைய அவலங்களை இல்லாதொழித்த பெருமை இன்றைய அரசாங்கத்தையே சாரும். நாட்டின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குப் பயணம் செய்வ தென்பது இன்று மிகவும் இலகுவானதாக மாறியுள் ளது. நகரங்களுக்கிடையிலான பெருந்தெருக்கள் யாவும் தற்போது முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டு ள்ளதன் காரணமாக பயணச் சிரமம் முற்றாக நீங்கி யுள்ளதுடன் பயண நேரமும் வெகுவாகக் குறைந்து ள்ளது.

வீதிகள் அகலமாக்கப்பட்டு ‘கார்பட்’ வீதியாக அபிவி ருத்தி செய்யப்பட்டுள்ளமை ஒருபுறமிருக்க மேம் பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதனால் போக்குவர த்து நெருக்கடியும் பெருமளவு குறைந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் பல்வேறு பகு திகளிலும் நெடுஞ்சாலைகள் துரிதகதியில் அபிவிரு த்தி செய்யப்பட்டு வருகின்றன. கிராமிய வீதிகளும் கொங்கிaட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். அரசாங்கத்தின் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டி வருவதை நாமறிவோம்.

வீதி அபிவிருத்தி நடவடிக்கையின் பலாபலன்களை நாட்டு மக்கள் அனுபவிக்க வேண்டுமென்பதே அரசாங்கத் தின் விருப்பமாகும். பயணச் சிரமமும் தாமதமும் குறைக்கப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

னால் இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் மாசுபடுத்தும் விதத்தில் வாகன சாரதிகள் பலர் நடந்து கொள்ளப் பார்க்கின்றனர். வீதிகள் நவீனமடைந்திருப்பதன் காரண மாக தனியார் பஸ் சாரதிகள் அசுர வேகத்தில் வாக னங்களைச் செலுத்துகின்றனர். இதன் காரணமாக தனி யார் பஸ் விபத்துகள் அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. பஸ் விபத்துகளால் உயிரிழப்புகளும் நாளாந்தம் அதிகரிக்கின்றன.

வீதி அபிவிருத்தியின் நன்மைகளை மக்கள் அனுபவி க்க வேண்டிய தற்போதைய நிலையில், சாரதிகளின் அலட்சியம் காரணமாக வாகன விபத்துகளும் மர ணங்களும் அதிகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தனியார் பஸ் சாரதிகளில் கூடுதலானோர் அலட்சியப் போக்குடையவர்களாவர். வேகமாக வாகனமோட்டு தல், வீதி ஒழுங்கு விதிகளை மீறுதல் போன்ற குற்றச் செயல்களில் தனியார் பஸ் சாரதிகளே கூடுதலாக ஈடுபடுகின்றனர்.

இவர்களது அலட்சியம் காரணமாக வீதி விபத்துகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்துப் பொலிஸார் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலு த்த வேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்