››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 1/25/2010 12:09:35 PM அமைதியான தேர்தலே மக்களின் எதிர்பார்ப்பு

அமைதியான தேர்தலே மக்களின் எதிர்பார்ப்பு

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இருபத்தாறாம் திகதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நாடெங்கும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் ஜனாதிபதித் தேர்தல் அமை தியான முறையில் நடைபெறுவதற்கான பாதுகாப்பு நடவடிக் கைகளில் சுமார் 68,800 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நாளைய தினம் நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் தேர்தலை குழப்பும் வகையிலான வன்முறைகள் தலைதூக்காதபடி பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுமாறு பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலில் மோசடிகள் முறைகேடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளைய தேர்தலில் எல்லாமாக இருபத்திரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, சரத் பொன்சேகா ஆகிய இருவருமே பிரதான வேட் பாளர்களாவர்.

நாடெங்கும் 11,115 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடு களை தேர்தல் திணைக்களம் செய்து முடித்துள்ளது.

இது இவ்விதமிருக்க நாளைய தேர்தல் தொடர்பான விதி முறைகளை தேர்தல் ஆணையாளர் சகல தரப்பினருக்கும்

தெளிவுபடுத்தியுள்ளார். வாக்களிப்பு நிலையத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம் வரையான சுற்றுவட்டப் பிரதேசம் அமைதி வலயமாகப் பேணப்பட வேண்டுமென்பது தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தல் ஆகும்.

இப்பிரதேசங்களுக்குள் வன்முறைகள் இடம்பெறலாகாது. வாக்க ளிப்பு முறைகேடுகளுக்கான குற்றச் செயல்களும் இடம்பெற லாகாது. அவ்வாறான ஏதேனும் குற்றச் செயல்கள் வாக்க ளிப்பைச் சீர்குலைக்கும் விதத்தில் இடம்பெறுமானால் மேற் படி வாக்குச் சாவடியில் மீண்டும் வாக்களிப்பை நடத்த வேண் டிய நிலைமை ஏற்படலாமென்றும் இதன் காரணமாக தேர் தல் முடிவை அறிவிப்பததில் தாமதம் ஏற்படலாமெனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவையெல்லாம் தேர்தலை நீதியாகவும் நியாயமாகவும் நடத்தி முடிப்பதற்கான வழமையான ஏற்பாடுகளாகும்.

இவை தவிர தேர்தல் கண்காணிப்புப் பணியில் உள்நாட்டிலு ள்ள ஆறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளிலி ருந்து இரண்டு தொகுதி நிறுவனங்கள் தேர்தல் கண்கா ணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒரு தொகுதி பணியாளர்கள் பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்தவர்களா வர். மற்றைய தொகுதியைச் சேர்ந்தோர் ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்தோராவர்.

தேர்தல் பாதுகாப்பைப் பொறுத்த வரை நடமாடும் பாதுகாப்பு சேவை ஏற்பட்டிருப்பது இம்முறை விசேட அம்சமாகும். இவ்விதமாக நடமாடும் பாதுகாப்புக்கென நாடெங்கும் 2523 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பொலி ஸாரும் முப்படைகளைச் சேர்ந்தோரும் உள்ளடங்குகின்றனர்.

இத்தகைய விரிவான முன்னேற்பாடுகள் யாவும் நாளைய தேர் தல் அமைதியான முறையில் நடைபெறுமென்பதை நமக்கு உணர்த்துகின்றன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள தேர்தல் தொடர்பான வன்முறைகள் கவலை தருகின்றன. சுமார் எண்ணூறு வன்முறைச் சம்பவ ங்கள் இடம்பெற்றுள்ளன. உயிர் இழப்புகளும் உடைமை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. வன்முறைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஜனநாயக நாடொன்றில் மக்களே ஆட்சியைத் தீர்மானிப்பவர்க ளாவர். மக்கள் தமது சுயசிந்தனையின் அடிப்படையில் இத ற்கான ஆணையை வழங்கும் சுதந்திரம் பெற்றவர்களாவர். மக்களின் தீர்ப்பில் வன்முறைகள் ஆதிக்கம் செலுத்த இடம ளிக்க முடியாது. எனவே, வன்முறைகள் அல்லது பலவந்தங் களை சகலரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

அதேசமயம் நாளைய தினம் எவ்வாறு நடந்து கொள்ள வேண் டுமென்பதில் மக்களுக்கென்று பொறுப்பொன்று உண்டு. மக்கள் நேரகாலத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்க ளது வாக்கைச் செலுத்திய பின்னர் உடனடியாகவே அப் பிரதேசத்திலிருந்து அகன்றுவிட வேண்டும். அநாவசிய அச ம்பாவிதங்களைத் தவிர்க்க இது உதவும். முறைகேடுகளைத் தவிர்க்கவும் இதன் மூலம் வழியேற்படும். அமைதியான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் சாதாரண மக் களுக்கும் பங்களிப்பு உண்டு.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்