அபிவிருத்தி நிகழ்ச்சி
நிரலுக்கு மக்களின் அங்கீகாரம்
நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அமோக
வெற்றியீட்டியுள்ளார். அவரது வேலைத் திட்டத்துக்கு மக்கள்
அங்கீகாரம்
அளித்துள்ளார்கள் என்பதே இதன் அர்த்தம்.
மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் இத் தேர்தல்
நடைபெற்றது. புற்றுநோய் போல,
மூன்று தசாப்தங்களுக்குக் கூடுதலான காலம் நாட்டை
அரித்துக்கொண்டிருந்த
பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு
வழிவகுத்தவர் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ. துணிச்சலுடன் பயங்கரவாதத்தைத்
தோற்கடித்ததன் பிரதான நோக்கம் நாட்டை
அபிவிருத்தி செய்வ தாகும்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்படும் என்ப தில் உறுதியான
நம்பிக்கை இருந்ததால்,
பயங்கர
வாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த
சமகாலத்தில் அபிவிருத்திச்
செயற்பாடுகளையும் ஜனாதிபதி மேற்கொண்டார்.
இந்த அபிவிருத்திச் செயற்பாடுகளைத் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வதற்கு
மக்களின் அங்கீ காரத்தைப் பெறுவதும் உரிய காலத்துக்கு முன்ன
தாக ஜனாதிபதித் தேர்தலை
நடத்தியதற்கான ஒரு காரணமாகும். இப்போது மக்களின் அங்கீகாரம்
ஜனாதிபதிக்குக்
கிடைத்திருக்கின்றது.
எதிர்காலத்துக்கான ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல்
அபிவிருத்தியும் சமாதானமும்
என்பதாகும். முழு நாடும் இதை அறியும். தேர்தல் காலங்களில்
இவ் விரு விடயங்களையும்
ஜனாதிபதி அடிக்கடி வலியுறுத்தியிருக்கின்றார்.
நிலையான சமாதா னத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறைச் சாத்திய
மான திட்டம்
ஜனாதிபதியிடம் இருப்பதைப் பொரு ட்படுத்தாமல் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு எதிரணி
வேட்பாளரை ஆதரிக்க முன்வந்தமை தமிழ் மக்க ளைப்
பொறுத்தவரையில் துரதிஷ்ட மான முடிவு.
இனப்பிரச்சினையைத் தோற்றுவித்ததும் காலங்காலமா கத்
தீர்வுக்குத் தடையாகச்
செயற்பட்டதுமான ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிங்கள மக்கள்
மத்தியில் இனவாத
உணர்வலையைத் தோற்று விக்கும் வகையில் செயற்படுகின்ற மக்கள்
விடு தலை முன்னணியினதும்
வேட்பாளரை ஆதரிப்பதற்குத் தீர்மானித்ததன் மூலம் இனப்
பிரச்சினையின் அரசியல்
தீர்வுக்கு முரணான வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
செயற் பட்டது.
இனப் பிரச்சினையின் அரசியல் தீர்வுக் கான கொள்கைத் திட்டம்
எதையும் இதுவரை
கொண்டிருக்காதவர்களிடம் சரியான அணுகு முறையை எதிர்பார்க்க
முடியாதுதான். தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர் வைப்
பொறுத்தவரையில் எப்போதும் போலவே
இப்போதும் பிழையான முடிவை எடுத்திருக் கின்றது. தமிழ்
மக்கள் இதைப் புரிந்துகொண்டு
சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்.
அபிவிருத்தியும் சமாதானமும் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரல்
என்பதை மேலே கூறினோம்.
தமிழ் பேசும் மக்களுக்கு இந்த இரண்டும் அவசிய மானவை. எனவே
இரண்டாவது தடவையும் பதவி
வகிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தமிழ்
பேசும் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி அபிவிரு த்தியும்
சமாதானமும் என்ற நிகழ்ச்சி
நிரலை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பங்காளிகள் ஆக
வேண்டும்.
நன்றி தினகரன் |