அபிவிருத்தி இலக்கை நோக்கிய பயணம்
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அமோக
வெற்றியீட்டியதையடுத்து வட க்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் அபிவிருத்தி
நடவடிக்கைகளை புதிய உத்வேகத்துடன் முன்னெடுப் பதற்கான ஏற்பாடுகள்
ஆரம்பமாகியுள்ளன.
‘மஹிந்தவின் சிந்தனை- எதிர்கால நோக்கு’ இரண்டாம்
பாகத்தில் உள்ளடங்கியுள்ள செயல் திட்டங்களை எது வித தாமதமும் இன்றி
உடனடியாக நடைமுறைப்படுத் துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை
விடுத்துள்ளார்.
அதே சமயம் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஏற்க னவே
ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணி களை தொடர்ந்து முன்னெடுப்பதன் மூலம்
அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசா ங்கம் முழுமையான
நடவடிக்கை மேற்கொள்ளுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க
அறிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றியா னது வடக்கு,
கிழக்கின் அபிவிருத்தியில் துரித முன் னேற்றத்தைக் கொண்டு வருமென்பது மக்கள்
மத்தி யில் ஏற்கனவே காணப்பட்ட நம்பிக்கையாகும்.
நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைய டுத்து,
துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பிரதேசங்களாக வடக்கும் கிழக்கும்
உள்ளன. இதற் கான திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதுடன் புதிய
திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நடந்து முடி ந்த தேர்தலில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ பெரு வெற்றியீட்டியதையடுத்து வடக்கு, கிழக்கு அபிவிருத் திப்
பணிகள் புதிய உத்வேகத்துடன் ஆரம்பமாகின் றன.
மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தில் உள்ளடங்கி யுள்ள
திட்டங்கள் துரித அபிவிருத்தி இலக்கை நோக் கியதாகும்.
இலங்கையை ஆசியாவிலேயே வர்த்தக, விமான, கடல் போக்குவரத்தில் கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த இட மாக மாற்றுவதன் மூலம் மக்களின் வருமானத்தை அதி
கரித்துக்கொள்ள வழியேற்படுமென ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ கூறியிருப்பதை இங்கு
குறிப்பிடுதல் பிரதானம்.
நாட்டில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதும் மக் களின்
வாழ்க்கைச் செலவைக் குறைப்பதும் மஹிந்த சிந்தனையின் பிரதான
குறிக்கோள்களாகும். யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதனால் ‘மஹிந்த சிந்தனை’
மூல மான அபிவிருத்தித் திட்டங்களை துரிதகதியில் முன் னெடுப்பதில் இனிமேல்
எதுவித தடையுமில்லையெ ன்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துவிட்டது. அதேசமயம் மற்றொரு
தேர்தலான பாராளுமன்றப் பொதுத் தேர் தலை நாடு எதிர்நோக்கியிருக்கிறது.
அரசியலில் வேறுபாடுகள் காணப்படுவது புதுமையானத ல்ல.
எந்தவொரு நாட்டிலும் அனைத்து மக்களும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக
ஒருபோதும் இருப்ப தில்லை. கட்சி வேறுபாடுகள் எதிரும்புதிருமாக இருப்
பதென்பது இப்போது முக்கியமல்ல...
நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து தரப்பினரும் பேத ங்களை
மறந்து ஒரே குடையின் கீழ் ஒன்றுசேர வேண்டுமென்பதே முக்கியம். எமது நாடு
தற்போது அபிவிருத்தி யுகத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. அபிவிருத்தியே
எமது நாட்டை முன்னேற்றப்பாதைக் குக் கொண்டு செல்லுமென்பதைக் கவனத்தில்
கொண்டு பேதங்களுக்கப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டி யதே இன்று பிரதானம்.
நன்றி தினகரன் |