பெற்றோரை இழந்த சிறுவர்கள்;
கிளிநொச்சி,
முல்லைத்தீவில் சிறுவர் மனவள நிலையங்கள்
மோதல்கள்
காரணமாக பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக கிளிநொச்சி மற்றும்
முல்லைத்தீவு பிரதேசங்களில் இரு சிறுவர்கள் மனவள நிலையங்களை அமைக்க உள்ளதாக
சிறுவர்
பாதுகாப்பு
அதிகார சபை நேற்று தெரிவித்தது.
கிளிநொச்சியில் ரூ. 350
மில்லியன்
செலவில் சிறுவர் மனவள நிலையம் அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்கான இடமும் அடையாளங் காணப் பட்டுள்ளதாக சிறுவர்
பாதுகாப்பு அதிகார சபை உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மோதல்கள்
காரணமாக சுமார் 1253
சிறுவர்கள்
பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களில் 239
பேர்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு பெற்றோர்களில் ஒருவரை மட்டும் இழந்த
308
பேர்
பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
684
பேர்
வவுனியா மற்றும் மன்னாரில்
உள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின்
நலன்களைப் பேண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள தோடு மேற்படி
சிறுவர் மனவள மேம் பாட்டுக்கு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட
உள்ளதாக
சிறுவர்
பாது காப்பு அதிகார சபை அதிகாரி கூறினார்.
நன்றி தினகரன் |