››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 2/3/2010 10:36:52 AM 62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்

62 வது சுதந்திர தின வைபவம்: கண்டியில் நாளை கோலாகலம்

தலதா மாளிகையிலிருந்து ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு உரை
 

இலங்கையின் 62வது சுதந்திர தின பிரதான வைபவம் நாளை காலை கண்டியில் மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது கண்டி தலதா மாளிகை வளவில் நடைபெறவுள்ள சுதந்திர தின பிர தான வைபவத்திற் கான சகல ஏற் பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்திகைகளும் இடம்பெற்றன.

சுதந்திர தின பிரதான வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியை முன்னிட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை திட்டமிட்ட வகையில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்கென பத் தாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாருடன், பொலிஸாருக்கு உதவியாக முப் படையினரும் ஈடு படுத்தப்பட்டு ள்ள னர்.

சுதந்திர தின த்தை முன்னிட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்று வருவதுடன் நாளை முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை பள்ளேகளவில் தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியும் நடை பெறவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு சுதந்திர தின பிரதான வைபவம் ஆரம்ப மாகவுள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.

ஜே. எம். லொக்குபண்டார, பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைக ளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் அமைச்சர்கள் உட் பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரின் மரி யாதை அணி வகுப்புகள் பாண்ட் வாத்தியங்களுடன் கலாசார நிகழ்ச் சிகளும் இடம்பெறவுள்ளன.

இம்முறை சுதந்திர தினத்தின் போது கடற்படை, விமானப் படை யின் சாகசங்களும் தவிர்த்து கொள் ளப்பட்டுள்ளதுடன் கனரக வாகன ங்களின் அணி வகுப்புகளும் குறைக் கப்பட்டுள்ளன.

இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப் படவுள்ளதுடன் மரியாதை நிமிர்த் தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப் படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்காக தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.
முப்படையினருக்கு மேலதிகமாக சுதந்திர தின பிரதான வைபவத்தி ற்காக மூவாயிரம் பொலிஸாரும், தேசத்திற்கு மகுடம் தேசிய கண் காட்சிக்காக ஏழாயிரத்திற்கும் அதிக மான பொலிஸாரும் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற் படாத வகையில் சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள் ளதுடன் கண்டி நகரையும் அதனை அண்டிய சில வீதிகள் தற்காலிகமா கவும், சில வீதிகள் நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களுக்கும் மூடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்