தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தி
பல்லின நாடொன்றில் சிறுபான்மையினரின் இருப்பை
உறுதிப்படுத்தும் காரணிகளுள் அபிவிருத்தியும் பிர தான இடம் வகிக்கின்றது.
சிறுபான்மையினரின் மொழி க்கான அங்கீகாரம், வாழ்புல உத்தரவாதம் போன்ற வேறு
காரணிகளும் உள்ளன. சிறுபான்மையினர் சார்பில் இனத் துவ அரசியலை
மேற்கொண்டிருப்பவர்கள் என்றாலென்ன, இன ஐக்கியத்தில் விசுவாசமான
பற்றுறுதியுடன் தேசிய அர சியலில் ஈடுபடுபவர்களாக இருந்தாலென்ன இவ்விடயங்க
ளில் அக்கறை செலுத்தாதிருக்க முடியாது. விசேடமாக சிறு பான்மையினக்
கட்சிகளுக்கு இதில் விசேட பொறுப்பு உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தனித்துவமான
பிரதிநிதி என உரிமை கோருகின்றது. ஆனால் மேலே குறி ப்பிட்ட விடயங்களில்
செயலீடுபாட்டுடன் இதுவரை எது வும் செய்ததாக இல்லை. இனப் பிரச்சினையின்
தீர்வுக்கு இது வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை. தீர்வுக்கான சந்
தர்ப்பங்களைச் சாட்டுகள் கூறித் தட்டிக் கழித்திருக்கின்றார் கள் என்பதைப்
பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின் றோம். தமிழ் மக்களின் வாழ்புல
உத்தரவாதம் இனப் பிரச்சி னையின் தீர்விலேயே தங்கியுள்ளது.
தமிழ்ப் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் தமிழ்த் தலைவர்
கள் அக்கறை செலுத்துவதில்லை. நாடு சுதந்திரமடைந்த கால த்திலிருந்து தமிழ்ப்
பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத் திய தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில்
சிறிதளவேனும் அக் கறை செலுத்தவில்லை. ஜீ. ஜி. பொன்னம்பலம் கைத் தொழில்
அமைச்சராக இருந்த காலத்தில் வடக்கில் காங்கே சன் சிமெந்துத் தொழிற்சாலை,
ஆனையிறவு உப்பளம், பரந் தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் கிழக்கில் வாழைச்
சேனை காகித ஆலை என்பன அமைந்ததன் பின் தமிழ்க் கட்சிகள் அபிவிருத்தியில்
கவனம் செலுத்தவில்லை. இத் தொழிற்சாலைகள் அவ்வப் பிரதேசத்தில் ஏராளம்
குடும்பங் களின் வாழ்வாதாரமாக இருந்ததைப் பார்க்கையில் அபிவி ருத்தியின்
முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அபிவிருத்தியும் சமாதானமும் என்ற தொனிப் பொருளுடன்
இன்றைய அரசாங்கம் செயற்படுகின்றது. கிழக்கு மாகாணத் தில் கணிசமான
அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அம் மாகாணத்தில் வளர்முக
மாற்றத்தை உணர முடிகின்றது. அரசாங்கம் இப்போது வட மாகாணத்தில் அபி
விருத்தியை ஆரம்பித்திருக்கின்றது. புலிகளின் தோல்விக் குப் பின் வடக்கில்
அபிவிருத்தியை முன்னெடுப்பதற்குத் தடை எதுவும் இல்லை. வட மாகாணத்தில்
தங்களுக்குக் கூடுதலான ஆதரவு இருப்பதாக உரிமை கோரும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவ டிக்கைகளுக்குக் கைகொடுக்க
வேண்டும்.
தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை
மேற்கொண்ட முடிவுகளும் நடத்திய போராட்டங்களும் இனப் பிரச்சினை வளர்வதற்கு
மாத்திரமன்றித் தமிழ்ப் பிர தேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைவு
காண்பதற்கும் கார ணமாக இருந்துள்ளன. இந்த நிலை இனியும் தொடரக்கூ டாது.
தமிழ்ப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கும்
இந்த நேரத்தில் தமிழ்த் தலை வர்கள் அதை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட வேண்
டும். தமிழ்ப் பிரதேச அபிவிருத்தியும் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததென்பதை
இத் தலைவர்கள் விளங்கிக்கொள் வார்கள் என நம்புகின்றோம்.
நன்றி தினகரன் |