முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா கைது
முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி
பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேக்கா இராணுவ பொலிஸாரினால்
நேற்று(பெப்:08) இரவு கைது செய்யப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக
மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
இராணுவ சேவையிலிருந்தபோது அரசியல் தொடர்பாக
கலந்துரையாடியமை, அரசாங்கத்திற்கெதிராக சூழ்ச்சிகளை மேற்கொண்டமை மற்றும்
அரசியல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக
வைத்தே விசாரணைகளை முன் னெடுப்பதற்காகவே இராணுவ பொலிஸாரினால் ஜெனரல் சரத்
பொன்சேக்கா கைது செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.
இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவதற்காக கைது
செய்யப்பட்டிருக்கும் சரத் பொன்சேக்கா அவரது அலுவலகத்தில் வைத்தே கைது
செய்யப் பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
|