››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 2/23/2010 9:09:38 AM வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கடவுச்சீட்டு அலுவலகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கடவுச்சீட்டு அலுவலகம்

வடக்கிலுள்ள மக்களுக்கு தாமதமின்றி கடவுட்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு தபால் மா அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மக்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய பிரதேச செயலங்களில் கையளித்து தமக்கான கடவுட்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகவிரைவில் கடவுட்சீட்டு வழங்கும் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பி பீ அபேகோன் தெரிவித்துள்ளார்.

நன்றி ஜனாதிபதி இணையம்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்