அரசின் மற்றைய இலக்கு நகரங்களின் அபிவிருத்தி
இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்றை
அரசாங்கம் வகுத்து ள்ளது. கொழும்பை மையமாக வைத்து நாட்டிலு ள்ள அனைத்து
நகரங்களிலும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதே இத்
திட்டமாகும்.
இலங்கையின் வரலாற்றை நோக்குமிடத்து கிராமங்களின்
அபிவிருத்தியில் உண்மையான அக்கறை செலுத்தப் பட்ட காலப் பகுதியாக ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக் காலத்தையே குறிப்பிட வேண்டும்.
கிராமப்பகுதி வீடமைப்பு, வீதி அபி விருத்தி, கல்வி முன்னேற்றம் போன்ற
பல்வேறு அடிப்படை வசதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தைப்
போன்று வேறெந்த அரசாங்கமும் அக்கறை செலுத்தியது கிடையாது.
கிராமப் பகுதி அபிவிருத்திக்கென ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால் வகுக்கப்பட்ட பல்வேறு திட்டங் களும் குறுகிய
காலத்துக்குள்ளேயே வெற்றி இலக்கை அடைந்திருக்கின்றன. கிராமங்களின்
அபிவிருத்தி யானது புறக்கணிக்கப்பட்டு வருகிறதென அங்குள்ள மக்கள் மத்தியில்
நிலவிய மனக்குறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெருமளவு
தீர்த்து வைத்துள்ளது.
அரசாங்கத்தின் அடுத்த இலக்கு நகரங்களின் அபிவி
ருத்தியாகும். நகரங்களில் கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவது மட்டுமே
இத்திட்டத்தின் நோக்கமல்ல..... நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்
தரத்தை மேம் பாடடையச் செய்வதற்கான இலக்கைக் கொண்ட தாகவே இத்திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
‘நகர் எழுச்சித் திட்டம்’ வேலைத் திட்டத்தை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையிலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை
ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான
திட்டம் விரிவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் குடியிருப்புத் திட்டங்களில் கவனம்
செலுத்த வேண்டிய தேவை நீண்ட காலமாக உள்ளது. ‘தோட்டங்கள்’ எனக்
குறிப்பிடப்படும் சிறிய வகை வீடமைப்புகள் தலைநகரில் ஏராளமாக உள்ளன. கொழும்பு
மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே ‘தோட்டங்கள்’ எனக் கூறப்படும் வீடமைப்புகள்
அதி களவில் உள்ளன. கொழும்பைப் பொறுத்த வரை ஐம்பது சதவீதமான மக்கள்
‘தோட்டங்கள்’ போன்ற அடிப்படை வசதிகள் குறைந்த வீடுகளிலேயே வாழ்கின்றனர்.
இக் குடியிருப்புகள் மிகவும் சிறியன. காற்றோட்டம் மிகவும்
குறைவானது. கழிப்பறை, குளியலறை போன்ற அடிப்படை வசதிகள் திருப்திகரமாக
இல்லாததன் காரணமாக அவற்றில் வாழும் மக்கள் மிகுந்த சிரம முறுகின்றனர். அதே
சமயம் இத்தகைய குடியிருப் புகளை அண்டிய பிரதேசங்கள் நுளம்புகள் பெருகக்
கூடிய இடங்களாகக் காணப்படுவதால் டெங்கு போன்ற கொடிய தொற்றுவியாதிகளுக்கு
உள்ளாகுவோரில் அதிகமானோர் இது போன்ற குடியிருப்புகளில் வசிப் பவர்களாகவே
உள்ளனர்.
அதேசமயம் கொழும்பு நகரில் சேரி வீடுகளும் அதிக ளவில்
காணப்படுகின்றன. சேரி வீடுகளை அபிவிரு த்தி செய்வதன் மூலம் அங்கு வாழும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். இம் மக்கள் எக் காலத்திலும்
இது போன்ற வசதியீனங்களுடன் வாழ் வது அவர்களது முன்னேற்றத்துக்கு உகந்ததல்ல.
இந் நிலையில் ஜனாதிபதி அறிவித்திருக்கும் திட்டமானது
நகரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பெரும் வரப் பிரசாதமாக அமையுமென்பதில்
ஐயமில்லை. அதே சமயம் புதிதாக வீடமைப்புத் திட்டங்கள் உருவாகுவது நகரங்களை
அழகுள்ளதாக மாற்றுமென்பதும் உண்மை. அடிப்படை வசதிகளும், சுகாதார சூழலும்
கொண்ட இருப்பி டங்களே மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமானவையாகும்.
நன்றி தினகரன் |