››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 3/1/2010 9:15:30 AM அமைதிச் சூழலில் தலைதூக்கும் விஷமிகள்

அமைதிச் சூழலில் தலைதூக்கும் விஷமிகள்

வட பகுதியில் முப்பது வருட காலத்தின் பின்னர் அமைதியும் சுமுகமும் நிறைந்த நிம்மதியான சூழல் தற்போது நிலவுகிறது. குண்டுச் சத்தங்களோ துப்பாக்கி வேட்டுச் சத்தங்களோ இப்போதெல்லாம் அங்கு கிடையாது. இரவு நேரத்திலும் கூட மக்கள் நிம்மதியாக எங்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை யாழ் குடாநாட்டில் நிலவி வருகிறது. யுத்தம் முற்றாக ஓய்ந்த பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை இது.

வட பகுதி மக்கள் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் எதுவித தடையுமின்றி தாராளமாக நாட்டின் தென் பகுதிக்கு சென்று வருகின்றனர். முப்பது வருட காலமாக யாழ் குடாநாட்டு க்குள் சிறைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு தற்போது சுதந்திரம் கிடைத்தது போன்றதொரு மனோ நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டுக்கும் தென் பகுதிக்கும் இடையில் இரவு பக லாக பஸ்கள் ஓடுகின்றன. யாழ் குடாநாட்டிலுள்ள எவரும் தென்பகுதியில் தமது தேவையை நிறைவேற்றி வருவதற் காக எவ்வேளையிலும் கட்டுப்பாடு எதுவுமின்றி புறப்பட்டுச் செல்லலாம். அதே சமயம் நாட்டின் தென் பகுதியை இது வரை கண்ணால் பார்த்திருக்காத இள வயதினர் வடக்கி லிருந்து தெற்கு நோக்கிப் புறப்படுகின்றனர்.

இதற்கு நிகராக தென் பகுதியில் உள்ள சிங்கள மக்களும் தினம் தோறும் யாழ் குடா நாட்டுக்குப் படையெடுக் கின்றனர். யாழ் குடாநாடென்பது வெறும் யுத்தபூமியாக மட்டுமே இதுகாலவரை தென்பகுதி மக்களுக்குத் தோன்றி யது. அங்குள்ள சமூக, கலாசார விழுமியங்களையோ சின்னங்களையோ நேரில் அறிகின்ற வாய்ப்பு தென்பகுதி மக்களுக்கு முப்பது வருட காலமாக கிடைக்கவில்லை யென்றே கூறலாம்.

இலங்கையின் வட பகுதியும் தென்பகுதியும் முன்னொரு காலத்தில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்ததற் கான வரலாற்று ரீதியான சான்றுகளை நூல்களின் வாயி லாகவே பெரும்பாலான மக்கள் இதுவரை அறிந்திருந்தனர். ஆனால் யாழ்குடாநாடு தற்போது அமைதிப் பூங்காவாக மாறியிருப்பதனால் அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களையும் மக்களின் வாழ்வு முறைகளையும் அம்மண்ணையும் நேரில் பார்த்தறிய வேண்டுமென்ற அவா தென்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருப்பது தவிர்க்க முடியாதது.

இதன் காரணமாகவே தென்பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வடபகுதி நோக்கிச் செல்கி ன்றனர். அங்குள்ள வழிபாட்டுத் தலங்களையும் தரிசித்துத் திரும்புகின்றனர். இத்தகையதொரு மனம் கவரும் சூழலுக் காக வடபகுதி மக்களும் தென்பகுதி மக்களும் மிக நீண்டகாலமாக காத்துக் கிடந்தனரென்பது உண்மை.

சுமுக நிலைமையொன்று உருவாகும்போது விஷம சக்திகளும் தலைதூக்குவது வழமையாகும். யாழ் குடாநாட்டிலும் தற் போது விஷமிகள் முளைவிடத் தொடங்கியுள்ளனர். அங்கு இரவு நேரங்களில் திருட்டுகள் பரவலாக இடம்பெறத் தொடங் கியுள்ளன. சட்ட விரோத மதுபான உற்பத்தி, விற்பனை போன்ற சமூக விரோத செயல்கள் தலைதூக்குகின்றன.

அதேசமயம் தென்பகுதியில் இருந்து வியாபார நோக்கத்து க்காக வட பகுதி செல்வோரும் முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளி வருகின்றன. தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்களை யாழ் குடாநாட்டுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதில் வியாபாரிகள் பலர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தென் பகுதியிலிருந்து கொண்டுசெல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்ட சிலர் உடல் உபாதைக்கு உட்பட்டு வைத்திய சிகிச்சை பெற்றிரு க்கின் றனர். உணவுப் பொருட்கள் மாத்திரமன்றி ஒருசில மருந்துப் பொருட்களும் காலாவதித் திகதி முடிவடைந்த நிலை யில் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு பாரதூரமான விடயமாகும். யாழ் குடாநாட்டில் மக்கள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இதன் கார ணமாக அங்கு நடைபாதை வியாபாரமும் பெருகியுள்ளது. தென்பகுதியிலிருந்து பலவிதமான பொருட்களையும் வியாபாரிகள் எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவற்றில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களும் அடங்கியிருக்கலாம். இவ்விடயத்தில் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென்பது ஒருபுறமிருக்க, மக்கள் மத்தி யிலும் போதிய விழிப்புணர்வு தேவை. தரமுள்ள பொரு ளையும் தரமற்ற பொருளையும் பிரித்தறிந்து பார்க்கும் விழிப் புணர்வு மக்கள் மத்தியில் அவசியம்.
அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் விஷமச் சக்திகள் குறித்து ஜாக்கிரதையுடன் இருத்தல் முக்கியம்.
நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்