சமாதானத்துக்கான தேர்தல்
எத்தனையோ தேர்தல்கள் வந்து போய்விட்டன. நடந்து முடிந்த
பல தேர்தல்களில் சமாதானமும் முக்கிய விடயங்களுள் ஒன்றாகப் பேசப்பட்டது.
எனினும் எதிர்பார்த்தவாறு சமாதானம் நிலவவில்லை. சமாதானம் ஏற்படாததற்கான
காரணங்களுள் முக்கியமா னது பயங்கரவாதம். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமை
இன்னொரு காரணம்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்குப் புலிகள் பிர
தான தடையாக இருந்துள்ளார்கள். அரசியல் தீர்வுக் கான முயற்சிகளைக்
குழப்புவதும் திசைதிருப்புவதும் அவர்களின் பிரதான பணியாக இருந்திருக்கின்றது.
புலிகளுடன் எந்த விதத்திலாவது ஒத்துழைத்தவர்களும் இனப் பிரச்சினையின்
தீர்வுக்குக் குந்தகமாகச் செயற் பட்டவர்களே.
இன்று நிலைமை மாறிவிட்டது. புலிகள் இப்போது அரசி யல்
களத்தில் இல்லை. அவர்களுடன் சேர்ந்து செயற்ப ட்டவர்களும் அந்தப்
பாதையிலிருந்து தங்களை அந் நியப்படுத்திக்காட்ட முயற்சிக்கின்றனர். எனவே இன்
றைய தேர்தல் இனப் பிரச்சினை பற்றிய நம்பிக்கையை தோற்றுவிக்கக் கூடிய
தேர்தலாக இருக்கின்றது.
எனி னும், இனப் பிரச்சினையின் தீர்வுக்கான தெளிவான
திட்டத்தைக் கட்சிகள் முன்வைக்காமை துரதிஷ்டமா னது. தமிழ் மக்களின் அரசியல்
தலைமைக்கு உரிமை கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட அரசியல்
தீர்வுக்கான தெளிவான திட்டமொன்றை இதுவரை முன் வைக்கவில்லை.
தேர்தல் விஞ்ஞாபனமாக அரசியல் தீர்வுத் திட்டம் கட்சிக
ளால் முன்வைக்கப்படாத போதிலும் சமாதானத்துக்கான நம்பிக்கைக்கு இடம்
இல்லாமலில்லை. பதவியிலுள்ள அரசாங்கத்தின் தன்மை இனப் பிரச்சினைக்குத் தீர்வு
காணும் முயற்சி வெற்றியீட்டுவதையும் தேக்கநிலை அடை வதையும் பெருமளவில்
தீர்மானிக்கின்றது. தேர்தலில் மக்களாணை பெற்ற நிலையான (அறுதிப் பெரும்பான்
மையுடன் கூடிய) அரசாங்கம் ஆட்சிக்கு வராமை தீர்வு முயற்சி தேக்கநிலை
அடைவதற்கான ஒரு கார ணம். தீர்வை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு மூன்
றிலிரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டியதும் அவ சியம்.
நடக்கவிருக்கும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்
னணி வெற்றியீட்டி ஆட்சிக்கு வரும் என நம்புவதற் கான காரணிகள் உள்ளன. இம்
முன்னணிக்கு மூன்றி லிரண்டு பெரும்பான்மை கிடைக்கக்கூடிய சாத்தியக்
கூறுகளும் தென்படுகின்றன. வலுவான நிலையில் ஒரு அரசாங்கம் அமைவது இனப்
பிரச்சினையின் தீர்வுக் குச் சாதகமான சூழ்நிலை என மேலே கூறினோம். இச்
சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தும் திறமையும் செயலார்வமும் உள்ளவர்கள்
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமையை ஏற்கும் பட்சத்தில் அரசியல் தீர்வு
முயற்சியைச் சிறப்பான முறையில் முன்னெடுக்க முடியும்.
நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலவுவதற்கு இனப்
பிரச்சினையின் தீர்வு அத்தியாவசியமானதாக உள்ள அதேவேளை வேறு விடயங்களும்
இல்லாமலில்லை. தற்போதைய தேர்தல் முறையை மாற்ற வேண்டியதும் அவற்றுள் ஒன்று.
இந்தத் தேர்தல் முறையும் அமைதி யின்மைக்கும் அடாவடித்தனம் தலைதூக்குவதற்கும்
கார ணமாக இருக்கின்றது. தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றிலிரண்டு
பெரும்பான்மை தேவை.
இனப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட நாட்டில் அமைதி யையும்
சமாதானத்தையும் ஏற்படுத்துவது இன்றைய பணி என்பதையும் அதற்கேற்றவாறு இத்
தேர்தலில் மக்களின் பங்களிப்பு அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட
விரும்புகின்றோம்
நன்றி தினகரன் |