வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் கல்வித் துறைக்கே முக்கியத்துவம்
வட மாகாண ஆளுநர்
சகல மாணவர்களுக்கும் கல்வியில் சம சந்தர்ப்பம் வழங்கப்பட
வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இடம்பெயர்ந்த மாணவர்களின்
கற்றலுக்குரிய அனைத்து வசதிகளையும் நாம் செய்துகொடுத்துள்ளோம். பத்து
தினங்களில் நாலாயிரம் மாணவர்களுக்கு வேண்டிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. சந்திரசிறி தெரிவித்தார்.
வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் ஒரு மாணவன்
கூட கல்வி கற்காமல் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த
மாணவர்களுக்கு வவுனியா காமினி வித்தியாலயத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட
வசதிகளை பார்வையிட்ட பின்னர் அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில்
உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது :-
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டுள்ளது.
வட பகுதி மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மூலம்
அனுப்பிவைக்கப்பட்ட ஆயிரம் தளபாடங்கள் வந்து சேர்ந்துள்ளன. அத்துடன் பாடசாலை
சீருடைகள், புத்தகங்கள் வந்துள்ளன. சிறார்களுடைய எதிர்காலத்தை வளமாக்கவே
கற்றலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அமைச்சர் றிசாட் பதியுதீன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரி.
இளங்கோவன், அதிபர் எஸ். சிவலிங்கம், சுதந்திர கட்சி அமைப்பாளர் பி.
சுமதிபாலா ஆகியோரும் இந்த வைபவத்தில் உரையாற்றினார்கள்.
நன்றி தினரன் |