வடக்குத் தெற்கு வர்த்தகப் பாலம்
தென்பகுதி உற்பத்திப் பொருட்களின் விலைகள்
யாழ்குடாநாட்டில் நியாய விலையில் கிடைப்ப தற்கும், யாழ்குடாநாட்டு
உற்பத்திப் பொருட்கள் தென்பகுதியில் தாராளமாகக் கிடைப்பதற்கும் தற்போது
வழியேற்பட்டுள்ளது.
தென்பகுதியில் இருந்து ஏ-9 பாதை ஊடாக யாழ்குடா
நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது பாதுகாப்புக் கருதி
இடைவழியில் பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம்
இப்போது நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல யாழ்குடாநாட்டில் இருந்து உற்பத்திப் பொருட் களை தென்னிலங்கைக்குக்
கொண்டு வரும்போது பாதுகாப்புக் கருதி ஏற்றி இறக்குவதற்காக அறவிடப்பட்டு
வந்த கட்டணமும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
ஒரு தொன் பொருட்களை ஏற்றி இறக்குவதற்கான கட்ட ணமாக இதுவரை
நான்காயிரத்து நூற்றைம்பது ரூபா அற விடப்பட்டு வந்தது. வர்த்தகர்களைப்
பொறுத்தவரை மேற் படி கட்டண அறவீடானது பெரும் சுமையாகவே காணப் பட்டது.
பொருட்களை ஏற்றியிறக்கும் கட்டணத்துக்கான செலவினத்தை வர்த்தகர்கள்
வேறுவழியின்றி நுகர் வோரிடமிருந்தே பெற வேண்டியிருந்தது.
இதன் காரணமாக தென்னிலங்கை உற்பத்திப் பொருட்களின் விலைகள் யாழ்குடாநாட்டில்
அதிகரித்திருந்தன. அதே போல தென்னிலங்கையிலும் யாழ்குடாநாட்டுப் பொருட்க
ளுக்கு கூடிய விலையும் கிராக்கியும் காணப்பட்டன.
இத்தகைய பிரச்சினை தற்போது முடிவுக்குக் கொண்டு
வரப்பட்டுள்ளது. பொருட்களை ஏற்றியிறக்குவதற்கான கட்டணம் நீக்கப்பட
வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் ஜனாதி
பதியின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார். அதனை யடுத்தே இக்கட்டணம்
உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.
யாழ்குடாநாட்டுக்கான தரைவழிப்பாதை திறக்கப்பட்டு வாக னப்
போக்குவரத்து தங்குதடையின்றி ஆரம்பிக்கப்பட்ட தையடுத்து வடக்கும் தெற்கும்
மிகவும் நெருக்கமடைந் துள்ளன. தென்னிலங்கையிலிருந்து தினமும் ஆயிரக்
கணக்கான மக்கள் யாழ்குடாநாட்டுக்குச் செல்கின்றனர்.
யாழ்குடாநாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் தென்னிலங்கை
நோக்கிப் பயணமாகின் றனர்.
இதேசமயம் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான வர்த் தக நடவடிக்கைகள்
நாளாந்தம் பெருகி வருகின்றன. தெற் கில் இருந்து கைத்தொழில் உற்பத்திப்
பொருட்கள் யாழ் குடாநாட்டுக்கு பெருமளவில் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை
செய்யப்படுகின்றன. அதே போன்று வடபகுதியிலிருந்து விவசாய மற்றும் கைத்தொழில்
உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் தென்பகுதிக்குக் கொண்டு வரப்படுகின்றன.
இப்பொருட்களின் விலைகள் உயர்வாக இருப்பதற்கு வர்த்
தகர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுவதுண்டு. பொரு ட்களை ஏற்றி இறக்குவதற்கான
கட்டணம் உயர்வாக இருப்பதையும் அவ்வர்த்தகர்கள் கூறுகின்றனர். இனி மேல்
இவ்விதமான காரணங்களை அவ்வர்த்தகர்கள் கூற முடியாது.
வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு
அதிகரிப்பதென்பது வர்த்தகர்களுக்கு மாத்திரமன்றி உற் பத்தியாளர்களுக்கும்
நன்மைகளை ஏற்படுத்துமென்பது உண்மை. இதன்மூலம் உற்பத்தியாளர்கள் தங்களது வரு
மானத்தைப் பெருக்கிக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.
விவசாயத்துக்கும் கைத்தொழிலுக்கும் பிரபல்யம் பெற்றி
ருந்த யாழ்குடாநாட்டுக்கு தற்போது புதிய வாய்ப்பு ஏற் பட்டுள்ளது. இதுவரை
காலமும் யாழ்குடாநாட்டு உற் பத்தியாளர்கள் வருமானம் இழந்திருந்தனர். இனிமேல்
அவர்களுக்கு எதுவித தடையும் கிடையாது. சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு
அம்மக்களுக்கு இன்று வழியேற்பட்டுள்ளது.
நன்றி தினகரன் |