››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 11/21/2014 6:03:59 PM

பத்தரமுல்லை “ரனவிரு” நினைவு சின்னத்தில் நினைவஞ்சலி

நேற்று மாலை(மே19) பத்தரமுல்ல பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள “ரனவிரு” நினைவுச்சின்னத்தில் (போர்வீரர் நினைவுச்சின்னம்), தாய்நாட்டிற்காக உயரிய தியாகங்களை செய்த இராணுவப் படையினர் மற்றும் பொலிஸ் பரிவினருக்கு மரியாதை செலுத்தும் முகமாக நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இந் நிகழ்வானது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆதரவின் கீழ் ரனவிரு சேவா அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் யுத்தவீரர்களின் மனைவிமார்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றிருந்தனர்.
அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில், போர்வீரர்களுக்காக இரண்டு நிமிட மௌண அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அனைத்து மததலைவர்களின் பங்கேற்பில் போர்வீரர்களுக்கான சமய வழிபாடுகுளும் இடம்பெற்றன.

அதன் பின்னர் திருமதி. வத்தேவின் பங்கேற்புடன் ஜனாதிபதி அவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சபாநாயகர், ஆளுநர்கள், அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத்தளதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட குடும்ப உறுப்பினர்களால் போர்வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

     
     
     
     
     
     
     
     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்