››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 11/21/2014 6:04:00 PM ஒட்டுச்சுட்டான் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்து குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கிவைப்பு

ஒட்டுச்சுட்டான் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்து குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கிவைப்பு

ஒட்டுச்சுட்டான் 64 ஆம் பிரிவு மற்றும் கிளிநொச்சி 57 பிரிவுகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் உடைய மாணவர்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

திரு.குஷில் குணசேகரவின் தலைமையில் சீனிகம பகுதியில் இயங்கும் “குண ஜய சதுட பதனம” எனப்படும் நற்பணி நிலையமானது, 300 மிதி வண்டிகளை ஒட்டுச்சுட்டான் மற்றும் கிளிநொச்சி வாழ் மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம், மீண்டும் அதன் உதவிக் கரத்தை வடக்கில் வாழும் மக்களுக்காக நீட்டியுள்ளது.

இதற்கமைய 300 மிதிவண்டிகளை, ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகத்தின் 64 ஆம் பிரிவு மாணவர்வளுக்கு வழங்கும் வைபவத்தை முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் முன்னெடுத்ததுடன், கிளிநொச்சி மாணவர்களுக்கான வைபவத்தை கிளிநொச்சி பாதுகாப்புப்படைத் தலைமையகமும் மேற்கொண்டது.

கடந்த ஒன்றரை வருட காலங்களுக்குள் இந் நற்பணி அமைப்பானது, 2000 மிதி வண்டிகளை, குறைந்த வருமாணம் பெறும் மக்களின் நலன்கருதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் “குண ஜய சதுட பதனம” நற்பணி நிலையத்தின் பிரதானி திரு.குசில் குணசேகர, 571 ஆம் படைப்பிரவுத் தலைமையக பொதுக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ரோவல், 573 மற்றும் 574 ஆவது படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பல பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்