››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பிராந்திய ரீதியான நகர அபிவிருத்தி – நுவரெலியா

பிராந்திய ரீதியான நகர அபிவிருத்தி – நுவரெலியா

நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கல பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் அரசு ‘மஹிந்த சிந்தன’ எண்ணக்கருவின் கீழ் நாட்டின் பல பாகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இதனடிப்படையில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவித்தி அதிகார சபையானது நாடு பூராகவும் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கலாக பெரிய மற்றும் பிராந்திய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் இத்திட்டங்கள் தேசிய அபிவிருத்தி, சுற்றுச்சூழல் நலன்கள், புவியியல் வசதிகள், பொருளாதார தேவைகள், மற்றும் சமூக கலாச்சாரம் போன்றவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய பல ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோரும் வருகை தரும் இயற்கை எழில் மிகு சற்றுளா பிரதேசமான நுவரரெலியா நகரம் இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. நுவரெலியா நகரம் புணர் நிர்மானப் பணிகளின் பின்னர் பழைய ஆங்கிலேய காலனித்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் ஆங்கிலேய கட்டடக்கலைகளுடன் பழைமைதுவம் சீர்குலையாத வண்ணம் காடச்சியளிக்கும்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற் கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தினூடாக நுவரெலியா நகரின் புறநகர் பகுதிகள், பாதைகள், நடைபாதைகள். வடிகால் மற்றம் பொது வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் இரண்டாம் கட்டமாக கிரகரி ஏரி, எலிசபத் வணிக மையம், தலவாக்கலை நகரம், கெடகலை ஈர நில பூங்கா என்பன அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

சிறிய மற்றும் நடுத்தர நகர அபிவிருத்திட்டதின் கீழ் நுவரெலிய நகரம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் நிர்மானப்பணிகள் அகற்றப்படவுள்ளதுடன் குறித்த நிலங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

155 மில்லியன் ரூபாய் பெறுமதியான, எலிசபத் வணிகக் கட்டடத் தொகுதியின் மீள் நிர்மானப்பணிகள் கடந்த 2013 மே மாதம் இலங்கை விமானப்படையினரால் அரம்பிக்கப்படது. 4 மாடிகள் மற்றும் 84 கடைகளைக் கொண்ட இக்கட்டடம் 2014 டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

கிரகரி ஏரி அபிவிருத்தித் திட்டத்தில் ஏரி தோண்டப்பட்டு உறுதியான கரையோர சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படவுள்ளன மற்றும் நடைபயிற்சி பாதைகள், சைக்கிள் ஓட்டப்பாதைகள், குழந்தைகளுக்கான பகுதி, விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளி அரங்கு மற்றும் நீர் வடிகால் அமைப்பு போன்றன நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவ் அபிவிருத்தி திட்டங்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக பிரதேச வாசிகளுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன் உள்ளூர் பொருளாதாரத்தையும் வளர்ச்சியடையச் செய்கின்றது. அது மட்டுமின்றி இது வர்தக நிலையங்களுக்கான அதிக இட ஒதுக்கீட்டை வழங்குவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துகின்றது, அத்துடன் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றது.

மேலும் இத்திட்டமானது பசுமை, சுத்தம் மற்றும் திறந்த நகரம் என்ற எண்ணக்கருவிற்கமைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் சூழல் நற்பை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்