››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாதுகாப்பு சேவை கல்லூரியில் நடைபெற்ற ‘விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இன்று (ஜுலை.30) கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சேவை கல்லூரியின் அதிபர் திருமதி ஜெயானத்தி அவர்களினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாட்டிற்க்காக உயிர்த்தியாகம் செய்த யுத்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பாதுகாப்புச் செயலாளர் திரு. பஸ்நாயக அவர்களினால் வரவேற்புரை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘விரு சிசு பிரதீப’ புலமைப்பரிசில் திட்டமானது 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யுத்த வீரர்களின் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் 2006 ஆம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் 153 பேருக்கும் கடற்படை வீரர்களின் 19 கபிள்ளைகளுக்கும் விமானப் படையைச் சேர்ந்தவர்களின் 15 பிள்ளைகளுக்கும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் 43 குழந்தைகளுக்கும் மொத்தமாக 230 பிள்ளைகளுக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான வங்கி வைப்புப் பணம் உட்பட பாடசாலை புத்தகப்பை, அப்பியாசக் கொப்பிகளும் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில்;
கல்வி கற்பதுடன் சமுகத்தில் ஒழுக்க விழுமியமுள்ள மாணவர்களாக திகழ்வதின் முக்கிய்த்துவத்தை வலியுறுத்தியதுடன் நாட்டின் எதிர்கால தலைவர்கள் என்ற வகையில் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கொடூர யுத்தத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்க்காக தமது உயிர்களைத் துச்சமாக மதித்து நாட்டிற்க்காக உயிர்த் தியாகம் செய்த யுத்த வீரர்களை நினைவு படுத்தியதுடன் அவர்களுக்கு தமது பாராட்டுக்களையும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி,இராணுவ கட்டளைத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ,சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள்,பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்