››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய விடுதி வசதிகள்

கொழும்பில் 6வது பொறியாளர் சேவைகள் படைப்பிரிவு வளாகத்தில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கான புதிய விடுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (நவம்பர்.06) கலந்து கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து கொண்டார்.
இந் நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் விஜேவர்தன அவர்களை பாடசாலையின் அதிபர் திருமதி. தம்மிக ஜெயனெட்டி அவர்கள் வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சர், செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் பிரித் ஓதலின் பின் சுப வேளையில் இவ் விடுதிக்கான அடிக்கல் நாட்டியமை குறிப்பிடத்தக்கது.
4 மாடிகளைக் கொண்ட இவ்விடுதியானது பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள 6வது பொறியாளர் சேவைகள் படைப்பிரிவின் வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.மேலும், இத்திட்டம் பூரணப்படுத்தப்படுமிடத்து 544 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட முடியும். அத்துடன் இச் செயற்றிட்டத்தை 2017ம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் மகா சங்க பிரதிநிதிகள், முப்படையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்களும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்