››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதலாவதாக இந்திய இராணுவப் பிரதானி ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார், இந்த சந்திப்பு இன்று (நவம்பர் 30ஆம் திகதி) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் இந்திய இராணுவப் பிரதானி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் இலங்கை வருகைத்தந்துள்ள இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையில் ஞாபகச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (நவம்பர் 29ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தார்.

தனது விஜயத்தின் ஓர் அங்கமாக பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று காலை வருகைத் தந்த இந்திய இராணுவப் பிரதானி ஜெனரல் தல்பில் சிங் சுஹாக்குக்கு இராணுவத் தலைமையக வளாகத்தில் வைத்து விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்திய இராணுவப் பிரதானிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இடையில் தனித் தனியாக சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்த சந்திப்புக்களின் போதும் ஞாபகச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த சந்திப்புக்களின் போது இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கெப்டன் பிரகாஷ் கோபாலன் ஆகியோர் வீட்டிருந்தனர்.

இதேவேளை, நேற்று பத்தரமுல்லை பிரதேசத்திற்கு விஜயம் செய்த இந்திய இராணுவப் பிரதானி அங்கு அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

சுமார் 1.3 மில்லியன் இராணுவத்தினரைக் கொண்ட மிகவும் பிரமாண்டமான இராணுவத்தின் கட்டளை தளபதியாக திகலும் ஜெனரல் தல்பிர் சிங் சுஹாக் இந்தியாவின் 26வது இராணுவப் பிரதானியாவார். இவர் (1987ஆம் ஆண்டு) அப்போது இலங்கைக்கு வருகைத் தந்த இந்திய அமைதி காக்கும் படைப் பிரிவுக்கு பொறுப்பான கட்டளை அதிகாரியாக சேவையாற்றியுள்ளமை விஷேட அம்சமாகும்.

இந்திய இராணுவப் பிரதாணி தலைமையிலான தூதுக்குழுவில் மேஜர் ஜெனரல் பிரம்ஜித் சிங், பிரிகேடியர் கோபால் குரங், கேர்ணல் அமிதாப் ஜா மற்றும் கெப்டன் என். கே. சரஸ்வா ஆகியோர் வருகைதந்துள்ளனர்.

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி தலைமையிலான தூதுக்குழுவினர் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்