››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

“ஐஎன்எஸ் விக்ரமாதித்யா” மற்றும் வழிப்படுத்திய ஏவுகனை அழிப்பான் “ஐஎன்எஸ் மைசூர்” ஆகிய கப்பல்கள் இலங்கை வருகை
இந்திய கடற்படையின் மேற்குப் பிராந்திய கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் ராவ்னீட் சிங் அவர்கள் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று (ஜனவரி.21) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்தியக் கடற்படையின் பாரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா’ மற்றும் வழிப்படுத்திய ஏவுகனை அழிப்பான் “ஐஎன்எஸ் மைசூர்” ஆகிய கப்பல்கள் இன்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தன. நல்லெண்ண விஜயத்தின் அடிப்படையில் வருகை தந்த இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

கப்பல்களின் கட்டளைத்தளபதிகள், கெப்டன் கே. சுவாமிநாதன் மற்றும் கெப்டன் எம்.போல் உள்ளிட்ட அதிதிகள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதிநிதிகளில் அடங்குகின்றனர். மேலும், இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகலாயத்த்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் கோபாலன், பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டுள்ள இக்கப்பல் தரித்திருக்கும் போது இலங்கை கடற்படையினரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலச்சார நிகழ்ச்சிகளுடன் கடற்படைத் தள மைதானத்தில் இலங்கை கடற்படை வீரர்களுடன் சினேக பூர்வ உதைபந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்திய கடற்படை வைத்தியர்களினால் மருத்துவ சேவை முகாம் ஒன்றும் காலி, நிலுவ பிரதேசத்தில் நாடத்துவதற்கான ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 

இதேவேளை இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கவுள்ளதுடன் கடற்படை பயிற்சிகளிளும் ஈடுபடவுள்ளனர்.

     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>

தொடர்பான செய்திகள் >>

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்