››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களை இராஜாங்க அமைச்சர் கண்காணிப்பு

இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் வகையில் இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களின் முன்னேற்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (மார்ச், 28) பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமையருமான ஒய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஷேகர் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரிடையே சினேகா பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கப்பல் கட்டும் பணிகளின் முன்னேற்றம் பற்றியும் ஆராயப்பட்டன.

அத்துடன் இந்திய கடலோர கண்காணிப்பு பணிகளுக்காக நிர்மானித்து முடிக்கப்பட்டுள்ள இது போன்ற உயர் ரக கடலோர கண்காணிப்புக் கப்பல்களில் அடங்கியுள்ள வசதிகள், உபகரணங்கள் என்பனவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.

இதன் முதலாவது கடலோர கண்காணிப்புக் கப்பல் 2017ம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைக்கபடவுள்ளதுடன் அதன் இரண்டாவது கப்பல் அதற்கடுத்த வருடம் இணையவுள்ளது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்