››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது

பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது

[2016/05/24]

 

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு பாகிஸ்தான் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. குறித்த நிவாரண பொருட்களில் சத்தரசிகிச்சை கூடம், எக்ஸ்ரே வசதிகள் , ஆய்வு கூடம், மருத்துவ பொருட்கள் அடங்கிய கள மருத்துவமனை மற்றும் மின்பிறப்பாக்கிகள், கூடாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்களும் அடங்கியுள்ளது.

இதேவேளை, வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மருத்துவ உதவியை வழங்கும் வகையில் பாகிஸ்தபனிலிருந்து மருத்துவ அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்கள் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதிற்கினங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் விமானப்படையின் சி-130 சரக்கு விமானம் ஒன்று நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ் நிவாரணப் பொருட்களை இலங்கைகான பாகிஸ்தான் தூதுவர் அதிமேதகு மேஜர் ஜெனரல் சையட் சகீல் ஹுசேன் அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கையளித்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்