››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அடைத்துக்கொண்ட கால்வாய்களை சுத்தம் செய்ய கடற்படையினர் உதவி

அடைத்துக்கொண்ட கால்வாய்களை சுத்தம் செய்ய கடற்படையினர் உதவி

டயலொக் இலவச கண்காணிப்பு தொழில்நுட்பத்தினை வழங்கியது

[2016/05/24]

கடற்படையின் தொடர்ச்சியான அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண பணியின் ஒரு பகுதியாக களனி கங்கைக்கு பாய்கின்ற கால்வாய்களை சுத்தப்படுத்தும் வகையில் கடற்படையின் கடற்படை வீரர்கள் குழுவொன்றும் இயந்திரங்களும் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.வெள்ள நீரினால் கொழும்பு புற நகர் பகுதிகளில் காணப்படுகின்ற கால்வாய்கள் குப்பை மற்றும் சல்வினியா போன்ற நீர்த் தாவரங்களினால் அடைத்துக் கொண்டதன் மூலம் நீரோட்டம் தடைப்பட்டது.

மேலும்,கடற்படை வீரர்கள் காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துடன் சேர்ந்து பிரன்டியாவத்த மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களின் கால்வாய்களை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ததன் பின்னர் தங்கி இருந்த வெள்ள நீர் வேகமாக வெளியேரக்கூடியதாகவுள்ளது. இதேவேளை, கடந்த இரு தினங்களாக களனி கங்கையின் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இதேவேளை, வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்படை படகுகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப தரவு தகவல் தொடர்பு வலையமைப்பை டயொலக் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.

இவ் இலவச தொழில்நுட்பம் கொழும்பு கடற்படை தலைமையகத்தின் பிரதான செயற்பாட்டு அறையிலிருந்து கடற்படை வெள்ள நிவாரண படகுகளின் ஈடுபடுத்தல் மற்றும் நகர்வு போன்றவற்றை இயக்க உதவியாக அமையும்.

களனி பள்ளத்தாக்கு பகுதியின் ஹங்வெல்லயிலிருந்து தொட்டலங்க ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட பகுதியில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுகின்ற 100 கடற்படை படகு குழுக்கள் இவ் வலையமைப்பை பயன்படுத்தி வெள்ளத்தால் சென்றடைய முடியாத பகுதிகளிலுள்ள மக்களையும் சென்றடைய உதவும்

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்