››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அவசர அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி தலைமையில்…..

அவசர அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி தலைமையில்…..

[2016/05/24]

எதிர்பாராத வகையில் மக்கள் முகம்கொடுக்க நேர்ந்த அனர்த்த நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதனூடாக மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீளவும் ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உருவாக்கிய ஜனாதிபதி செயலணி நேற்று (23) மாலை ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்று கூடியது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனோடு தொடர்புடைய அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

அனர்த்தத்தில் சிக்கி பாதிப்படைந்த மக்களுக்கு உதவிகளை வழங்கிய எல்லா பொதுமக்களுக்கும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இச்சந்தர்ப்ப்த்தில் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்