››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உலக வங்கியினால் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளை மேலும் நெகிழ்ச்சியான ஒரு கொள்கையின் கீழ் வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்…..

உலக வங்கியினால் வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளை மேலும் நெகிழ்ச்சியான ஒரு கொள்கையின் கீழ் வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்…..

[2016/05/25]

இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி ஏற்பாடுகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள முறைமைகள் குறித்தும் உலக வங்கி தலைவர்கள் பாராட்டு…

மக்கள் வாழ்க்கையை எழுச்சிபெற செய்து அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதி ஏற்பாடுகளை மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒரு நெகிழ்ச்சியான கொள்கையின்கீழ் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், உலக வங்கித் தலைவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது.

உலக வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் 12 பேர்கள் கொண்ட ஒரு குழு நேற்று (24) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தபோதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

உலக வங்கி உதவியின்கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு கருத்திட்டங்களின் முன்னேற்றங்களை கண்டறிவதற்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் கடன் வசதிகளில் மூலோபாய மாற்றங்களை செய்வதற்கும் உலக வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சிலர் 34 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உலக வங்கி உதவிகள் தொடர்பில் நாட்டின் சில மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பெற்றுக்கொண்ட விடயங்கள் இதன்போது மீளாய்வுக்குட்படுத்தப்பட்டது.

இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்தி அபிவிருத்திப் பயணத்தில் கைகோர்த்துக்கொள்ளுமாறு இதன்போது உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், மத்திய தர வருமானம் பெறும் நாடுகளின்கீழ் இலங்கையை உள்ளடக்கும்போது கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதில் தாக்கம் செலுத்தும் நிபந்தனைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டார்.
30 வருட கால யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் பூகோள காலநிலை தாக்கங்களுடன் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு தடைகளாக உள்ள சவால்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலக வங்கியின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை உட்பட 60 நாடுகளில் பொருளாதார மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த நாடுகளுக்கு மத்தியில் இலங்கை ஒரு முக்கிய இடத்தில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தாம் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்துள்ள காலப்பகுதியில் ஜனாதிபதியிடம் உள்ள பல நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கவும் ஆணைக்குழுக்களை அமைப்பதற்கும் சட்டம், ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவும் பொருளாதார அபிவிருத்திக்காகவும் எடுத்துள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தார்.

அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் உலக வங்கியின் கடன் உதவியை சரியான முறையில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை தொடர்பிலும் தாம் திருப்தியடைவதாக தெரிவித்த உலக வங்கிப் பிரதிநிதிகள், மத்திய தர வருமானம் பெறும் நாடுகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் தொடர்பிலான நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் நாட்டின் தற்போதைய ஏற்றுமதி இறக்குமதி நிலைமைகள், வெளிநாட்டு சொத்துக்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக்கொள்கை தொடர்பிலும் இதன்போது பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

Subhash Chandra, Heenam Chol, Matthew T. Mcguire, Jose Alejandro Rojas Ramirez, Rionald Silaban ஆகியோர் உள்ளிட்ட உலக வங்கியின் நிறைவேற்று அதிகாரிகளும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த ரத்னாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்