››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானில் ஜனாதிபதி அவர்களுக்கு பெருவரவேற்பு….

ஜப்பானில் ஜனாதிபதி அவர்களுக்கு பெருவரவேற்பு….

[2016/05/26]

ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பானுக்கு பயணமான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (26) முற்பகல் தெற்கு ஜப்பானின் நகோயா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். ஜனாதிபதியையும் தூதுக்குழுவினரையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ (Yoji Muto), மாவட்ட ஆளுநர் ஹீதேகி ஒமோரா ( Hideaki Oomura) ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் மிக விமர்சையாக வரவேற்கப்பட்டனர்.

அவ் வரவேற்பினையடுத்து ஜனாதிபதி அவர்கள் தங்கியிருக்கும் நயோகா ஹில்டனில் (Nagoya Hilton) ஜனாதிபதி அவர்களுக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு உற்சவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகல் வியட்நாம் பிரதமர் (Ngyuyn Xuan Phuc) அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதுடன் ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் சௌபாக்கியம் ஆகிய தலைப்புகளுடன் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார்.

அதையடுத்து ஜனாதிபதி அவர்கள் ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புக்களின் வர்த்தக அமைப்பின் தலைவர் (Hiroyuki Ishige) மற்றும் (Onomichi Dockyard) நிறுவனத்தின் தலைவர் டகாஷி நகாபே ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார். இலங்கைக்கு பெருமளவு பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த உச்சி மாநாடு இடம்பெறும் காலப்பகுதியில் நடைபெறவுள்ளது.

நன்றி ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்