››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவம் மீட்பு நடவடிக்கைகளை தொடர்கிறது

இராணுவம் மீட்பு நடவடிக்கைகளை தொடர்கிறது

[2016/05/26]

இலங்கை இரானுவத்தின் முதலாவது கள பொறியியல் படைப்பிரிவு, காணி சீர்திருத்த அமைச்சுடன் இணைந்து ஜா-எல அத்தனகலு ஓயா வடிகால் பகுதியின் நிறைந்துள்ள குப்பை கூளங்களை அகற்றும் பணிகளை நேற்று (மே, 25 ) முன்னெடுத்தது.

அத்தோடு, தந்துகன் ஓயா, பியகம,போல்லேவ,ஹன்வெல்ல மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளில் வடிகால்களில் தேங்கியுள்ள வெள்ள நீரினை விரைவாக வெளியேற்றும் வகையில் இராணுவத்தின் பாரிய இயந்திரங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டன.

மேலும், ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்கள் நடாத்துதல், உலருணவுப் பொருட்கள் விநியோகித்தல் என்பனவற்றில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வரும் அதேவேளை நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு நிவாரணப்பணிகளிளும் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் மண்சரிவு ஏற்பட்ட அரநாயக்க பகுதிக்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் நான்காவது சிங்க படைப் பிரிவும் எட்டாவது விஜயபாகு இலேசாயுத படைப் பிரிவும் கூட்டாக இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்