››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

[2016/05/27]

திருகோணமலை சம்பூர் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. ஹாபிஸ் நஸீர் அஹமத் அவர்கள் இலங்கை கடற்படைக்கப்பல் விதுர முகாமின் கட்டளை அதிகாரியுடன் நடந்து கொண்ட விதம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்த்தன அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் விசேடமாக போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானப் பணிகள் விலைமதிப்பற்றவைகள் ஆகும். இவ்வாறான திட்டங்களில் கடற்படையினர் வகிக்கும் முக்கிய பங்கினை கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டிப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதனோடினைந்தாக சம்பூர் மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவிய ஆய்வுகூட உபகரணங்களுக்கான தேவைப்பாடுகளை இலங்கை கடற்படைக்கப்பல் விதுர முகாமின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள் பலர் தனியார் துறையினரின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்படி விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

சம்பூர் பிரதேசத்தில் இடம்பெறும் முறையான நீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானப் பணிகள் குறித்து பொறுப்புள்ள ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முதலமைச்சர் பெருமிதம் அடைய வேண்டும் எனவும் பொறுப்புள்ள ஒரு அரசியல்வாதி என்ற வகையில் குறித்த வைபவத்தில் முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்திருக்குமாயின் அதனை அவர் நாகரீமான முறையில் சுட்டிக்காட்டியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் நீடித்த பயங்கவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படைவீரர்களுக்கு சங்கடமளிக்கிற வகையில் நடந்து கொள்ள யாரையும் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர்களின் கௌரவத்தை பாதுகாப்பேன் எனவும் இராஜாங்க அமைச்சர் விஜேவர்த்தன அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறுப்புள்ள வகையில் நடந்து கொள்வார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். சம்பூர் மற்றும் கிழக்கு மாகாண பிரதேசங்களில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் என்றுமே பாராட்ட தக்க செயல்கள் ஆகும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்